நள்ளிரவில் சுதந்திரம் – நூலும் இணையத் தொடரும்

Nov 21, 2024 | Uncategorized | 0 comments


டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ் எழுதிய நள்ளிரவில் சுதந்திரம் 1947 உற்சாகம் இழந்த லண்டன் நகரில்( காரணம் இரண்டாம் உலகப்போரும் அதனால் ஏற்பட்ட இழப்புகளும்) தொடங்கி மௌன்பேட்டன் பிரபு(பிரிட்டானிய இந்தியாவின் கடைசி அரசு பிரதிநிதியாகவும் சுதந்திர இந்தியாவின் முத்ல் ஆளுநராகவும் இருந்தவர்) இந்தியாவின் அரசு பிரதிநிதியாக இந்தியாவிற்குச் சுதந்திரம் குறித்த உரையாடலை நிகழ்த்த அனுப்ப ஏற்பாடு ஆவதிலிருந்து தொடங்கி, இந்தியாவில் மகாத்மா காந்தியடிகள் நவகாளியில் மேற்கொண்ட பயணமும் அங்கு அவர் மத கலவரத்தை எதிர்கொண்ட நிலையையும் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்களையும் இறுதியாக நவீன இந்தியா உருவாவதற்கு முன் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதையும் சுதந்திர இந்தியாவில் காந்தியடிகளின் மரணத்தைப் பற்றியும் பேசுகிறது.
நிகில் அத்வானி உருவாக்கியுள்ள ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ என்ற அரசியல் தொடர் நவம்பர் 15 ஆம் தேதி சோனி லைவில் 6 பகுதிகளாக ஒவ்வொரு பகுதியும் 45 மணித்துளிகள் திரையிடப்பட்டுள்ளது. டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ் ஆகியோரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொடர், 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்தைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும் இந்தியா பாகிஸ்ஃதான் பிரிவு குறித்து தலைவர்களின் உரையாடலையும் காட்சிப்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் சுதந்திரம்

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *