ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

Jan 1, 2022 | Uncategorized | 0 comments

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்ட வாழ்க்கையை நவீனம் என்கின்றோம். அதனோடு இன்றளவும் இயைந்து வாழக்கூடியவர்களைப் பழங்குடிகள் என அடையாளப்படுத்துகிறோம். தமிழகத்தில் 36 வகையான பழங்குடிகள் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களின் வாழ்வியல் குறித்த ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆய்வுகளை வாசிக்கும் பொழுது, ஆய்வுகளின் நோக்கம் ஆவணப்படுத்துவது மட்டுமா? வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதா? அம்மக்களை மேம்படுத்டுவதா? அவர்களின் வாழ்வியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வாழ்க்கையை அளிப்பதா? என்ற பல்வேறு வினாக்கள் எழுகின்றன.

            நீலகிரி, ஈரோடு, சத்தியமங்கலம் பகுதிகளில் வசித்துவரும் ஊராளி எனப்படும் பழங்குடி மக்களோடு ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து, அவர்களின் வாழ்வியல் முறைகளை நுட்பமாக அவதானித்து, அங்குள்ளோரிடம் வாய்மொழியாகப் பெற்ற விவரங்களை அடிப்பட்டையாகக் கொண்டு, தம்முடைய அனுபவத்தையும் இணைத்து தகவல் கிடங்காக மட்டும் இல்லாமல் வாசகர்களை ஈர்க்கும் வகையில் பிலிப் குமார் என்னும் ஊராளன் சே.ச. ஊராளி இனக்குழுவின் வாழ்வியலை நூலாக்கம் செய்துள்ளார். ஊராளி பெயர்க்காரணம், உணவு, வீடு அமைப்பு முறை, ஆடை, அணிகலன்கள், மொழி, சமூக அமைப்பு, அரசியல், புழங்குப் பொருள்கள், மருத்துவ  அறிவு, சடங்குகள், தெய்வங்கள், கலைகள் விளையாட்டுகள், வாழ்வியல் ஞானம், வாழ்வியல் சிக்கல்களும் தேவைகளும் எனப் பகுத்துக்கொண்டு பதிவுசெய்துள்ளார். நவீன மனநிலையில் வாழ்விலைக் கொண்ட நாம் அவர்களை எவ்வாறு அணுகுகிறோம். தமிழ் சமூக மைய நீரோடத்தில் அவர்களின் பங்கு என்னவாக இருக்கிறது என்று எண்ணினாலும், இந்நூலை வாசித்து முடித்த பொழுது, இயற்கை சூழலிருந்து அவர்களைப் பிரிக்காமல், அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுதாலே  பெரும் பேறாக இருக்கும் என்று தோன்றியது..

பின்னிணைப்பாக ஊராளி மொழியின் சொற்கள் வாக்கியங்கள் வாய்மொழிப் பாடல்கள் வசிக்கும் பகுதி, புகைப்படங்கள்
இணைத்திருப்பது சிறப்பு.

            ஊராளி மக்கள் குறித்த புரிதலை இந்நூல் வழங்குகிறது. தமிழ்மண் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *