குமட்டிக்கீரை

Jun 29, 2012 | Uncategorized | 0 comments

கார்த்திகை மார்கழி மாதங்களில் கொல்லையில்,வயல்களில் கடலை போடும் பொழுது அதனூடாக முளைக்கும் கீரை. இந்த கீரை எங்களூரில் அந்த காலங்களில்  மட்டும் தான் கிடைக்கும்.கடலை  களை வெட்டும்பொழுது அதுனூடாக இருக்கும்  இளங்கீரையாக இருக்கும் குமட்டிகீரையை மாலை நேரங்களில் பறித்துக்கொண்டு வந்து கொடுப்பார்கள்.வேரை மட்டும் கிள்ளிவிட்டு சிறது தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்தால் ஒரே ஆவியில் வெந்துவிடும். எடுத்து கடைந்து கடுகு, காய்ந்த மிளகாய்,சின்னவெக்காயம், போட்டு தாளித்து சாப்பிட்டால் என்ன ஒரு சுவை. உண்மையாகவே இந்த கீரையின் சுவையைப் போல் வேறு எந்த கீரையின் சுவையையும் நான் அறிந்ததில்லை. அது பெரிதாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை.எங்களூரில் பெரிதாகி பார்த்தில்லை. இளங்கீரையாக கிடைக்கும் நாள்களில் பயன்படுத்துவதோடு சரி. இளம் குமட்டிக்கீரை அதை கடைந்து சாப்பிட்டால் அப்பப்பா… சொல்லி மாளாது சுவை…

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *