வேள் எவ்வியின் பகைவர்களைப் பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் அரிமண வாயில் உறத்தூர் என்ற ஊர்ப்பெயர் குறிக்கப் பெற்றுள்ளது. அரி-கள், உறப்பு-செறிவு, கள்ளின் மணம் செறிந்த ஊர் அரிமண வாயில் உறத்தூர் என்று அமைந்திருக்கலாம்.
“வாய்வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்
அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண்,
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன.
கவ்வை ஆகின்றல் பெரிதே . . . . ” (அகம்-266-11-15)
– இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் – தொகுதி – ஒன்று – ஆர். ஆளவந்தார் – ப.63.
எவ்வி என் பானின் பகைவர் ஊர்களாக அரிமண வாயில், உறத்தூர் என்னும் இரு ஊர்களைப் பரணர் குறிக்கின்றார்.
இந்த அரிமண வாயிலே இன்று அரிமளம் என்று வழங்குகின்றது என்பர். பண்டை நாளைச் சேரர் வரலாறு எனும் தம் நூலில் ஔவை துரைசாமியார்.
– தென்னாட்டுப் போர்களங்கள், க. அப்பாத்துரை
0 Comments