மூக்கரட்டை ரசம்(சூப்)

Jun 28, 2012 | Uncategorized | 0 comments

எங்க ஊரில் (ஒக்கநாடு கீழையூர் என்ற ஒக்கூர்)அதிகமான அளவு மூக்கரட்டை எங்கும் படர்ந்து காணப்படும். எங்க அம்மாயி நல்லா சமைக்கும்.  அவங்க சமைச்சா எங்க வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். எதனையும் மிக சுவையாக சமைத்து தருவதில் கைதேர்ந்தவர். மூக்கரட்டை ரசம் வைத்து தருவார்கள் அவ்வளவு அருமையாக இருக்கும். மூக்கரட்டை தரையோடு படர்ந்திருக்கும் அதனை பிடிங்கி வந்து அதன் வேரை அம்மியில் மைய அரைத்து அதனுடன் மிளகு, சீரகம்,சோம்பு,மஞ்சள், மிளகாய், கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்து வைத்து அரைத்து வழிக்கும் போது சிறிய வெங்காயத்தையும் வைத்து வழித்து எடுத்து, நல்லெண்ணை ஊற்றி சிறிது கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி நன்றாக வதக்கி விட்டு, புளி கரைகல் குறைந்த அளவு அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவையைக் கலந்து, கொதித்து வரும்பொழுது அதன் மேல் நல்லெண்ணைவிட்டு இறக்கி வைத்தால் கமகம மணம், மிகுந்த சுவை. வாய்ப்புக் கிடைத்தால் ஊருக்குப் போகும் பொழுது அம்மாயியை வைக்கச் சொல்லி படத்தோடு போடுகிறேன்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *