அட்டவாயில்

Jun 22, 2012 | Uncategorized | 0 comments

இருபெரு மன்னர் போரிட்ட இடம் என்பதைக் குறிக்கும் அட்டவாயில் என்பது பின்னர் ஊருக்குப் பெயராய் அமைந்தது என எண்ண வாய்ப்பு உள்ளது.

இவ்வூர்ப் பெயர்கள் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் இடம் பெற்றுள்ளது.  பெருங்கொடி அசைந்து பறக்கும் ஊர் என்றும், அங்குள்ள கழனிகள் பசுங்கதிர்களைத் தாங்கிப் பெருங்கவினுடையன என்றும் அக்கவினையொத்தக் கவினுடையவள் தலைவி என்றும்கூறி தலைவியின் நலம் பாராட்டப் பெற்றுள்ளது.

அகப்பொருள் பற்றிக் கூறும் இலக்கியப் பாடல்களில் ஊர்ப்பெயர்கள் இடம் பெற்றிருப்பதை நோக்கும் பொழுது ஓர் உண்மை புலப்படும்.  தலைவியின் நலம் பாராட்டப்பெறும் இடங்களில் ஊர்ப்பெயர்கள் பல இடம் பெற்றிருக்கின்றன.  ஊரின் வளமும் பெயரும் கூறி அப்பெருங்கவின் ஒத்த நலமுடையான் எனத் தலைவியின் நலம் பாராட்டப் பெற்றுள்ளது.  இதன் மூலம் அக்குறிப்பிட்ட நகரின் வளமும் நமக்குத் தெரிகிறது.

“பெருங் கொடி நுடங்கும் அட்டவாயில்

இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன

நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து

விழவில் செலீ இயர் வேண்டும் . . . . (அகம் – 326-5-8)

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *