தனே புயலின் அறுவடை

Feb 29, 2012 | Uncategorized | 0 comments

2011 டிசம்பர் 29 அன்று கடலூர்,புதுச்சேரி பகுதியில் கோரத்தாண்டவம் ஆடிச் சென்ற தனே புயல் குறித்து தனே புயலின் அறுவடை என்னும் ஆவணப்படத்தை தங்கர்பச்சான் பிப்ரவரி 25 அன்று சிதம்பரம் லேனா திரையரங்கில் வெளியிட்டுப் பேசினார். சுனாமி ஏற்படுத்திய பாதிப்பு வேறு தனே புயல் ஒரு தலைமுறையின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிட்டது. கடலூர் மாவட்டம்  பல  பகுதிகளின் வாழ்வாதாரமாக இருக்க கூடிய பலா,முந்திரி போன்ற மரங்கள் அழிந்த நிலையில், அது போன்று உருவாக்க குறைந்தது இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதுவரை அவர்களின் வழி என்ன? அப்படி மரங்கள் வைத்தாலும் அதனை காவந்து பண்ணுவது எப்படி?நிலத்தடி நீர்மட்டம் இறங்கி போயியுள்ள நிலை இது எப்படி சாத்தியமாகும்? இதற்கு அரசு என்ன தீர்வை கூறப்போகின்றது என்ற வினாவுடன் ?ஆவணப்படம் திரையிடப்பட்டது.48 நாள்கள் அங்கு தங்கி எடுக்கப்பட்டதாக கூறினார். தமிழர் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடவேண்டிய  மக்கள் புயல் அறுவடை செய்து சென்ற நிலையில்  அடிப்படை வசதிகள் கூட பழுது நீக்கப்படாமல்  புலம்பி தவிக்கும் மக்களையும், வாங்குவோர் இன்மையால் சுணங்கி போன வியாபரங்களும், அவ்வூர்களில் வசிக்க கூடிய மக்களின் வார்த்தைகளைப் பதிவு செய்திருந்தார். ஆவணப்படம் பதிவில் சில குறிப்பிட்ட பகுதியையே திரும்ப திரும்ப காட்டப்பட்டது நெருடலை ஏற்படுத்தியது. எங்கள் துறையில் பயிலும் பல மாவணவர்களின் ஊர்களில் ஒரு மரங்கள் கூட இல்லாமல் ஒட்டுமொத்த மரங்களும் சாய்ந்து, மரங்களே இல்லாமல் அவர்களின் ஊர்கள் காட்சியளிப்பதாகக் கூறினார்கள். இன்னும் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. தண்ணீர் எடுக்கப்போகும் போது, சுமக்கமுடியாமல் இறந்த சூல் கொண்ட பெண் குறை மாத குழந்தை காட்டியது  நெஞ்சை பதற வைத்தது. சிலர் பேச்சுகள் சொல்லிக்கொடுத்துப் பேசியது போன்ற நாடகத்தன்மை இருந்தது. ஆவணப்படத்தின் ஒரு இடத்தில் திரையரங்கில் இருந்தவர்கள் கைதட்டினார்கள் அதில் ஒரு பெண் ஓட்டு வாங்க வரும்பொழுது கூழைக்கும்பிடு போடுவது, அதற்கு என்ன செய்யமுடியுமோ அவ்வளவையும் செய்வது, ஆனால் இப்போ எங்க போனாங்க வரவே இல்லை என்கிற போதுதான் கைத்தட்டல். நம் மக்கள் எப்படி எதையெல்லாம் கைதட்டி ரசிப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை.
சிலர் பேசியதுஇயல்பாக இல்லாமல் சொல்லி கொடுத்துபேசியதுபோன்று இருந்தது. அந்த பகுதியில் இருந்த மரங்கள் அழிந்த்தால் குறவர் இன மக்கள் பாதித்து இருப்பதையும் பதிவு செய்திருந்தார். இறுதியாக தானே புயல் தலைமுறையே சாய்தது என்னும் பாட்டும், அதற்கு கூத்து கலைஞர்களின் முக பாவனையும் முடிவாக அமைந்தது.இந்த ஆவணப்படத்தினை மத்திய மாநில அரசுகளிடம் காட்டி இப்பகுதியைப் பேரிடர் இழப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கப்போவதாக கூறியுள்ளார். பார்ப்போம்…

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *