2012 புத்தக கண்காட்சி

Jan 9, 2012 | Uncategorized | 0 comments

2012 க்கான புத்தக கண்காட்சிக்கு நேற்று சென்று வந்தேன். ஞாயிறு 12 மணியளவிலேயே  கூட்டம் நிரம்பி வழிந்த்து.  புத்தக கண்காட்சியைக் காண இவ்வளவு கூட்டம் பிரமிக்க வைத்தது. ஒரு நாளில் அனைத்து புத்தக கடைகளுக்குள்ளும் நுழைந்து பார்க்கும் சாத்தியம் வாய்க்கவில்லை. குறிப்பாக தமிழ் இலக்கிய, இலக்கணம் ,மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறித்தான புத்தகங்கள் மட்டும் வாங்கியதால் அவை தொடர்பாக கடைகளுக்கு மட்டமே செல்ல முடிந்தது. இலக்கியம் திறனாய்வு சார்ந்த நூல்கள் இந்த ஆண்டு பெருமளவு இல்லை என்று கூறலாம். சில பழைய புத்தகங்களின் அட்டைகள் மாற்றப்பட்டு காட்சியளித்தன.
 
ப. அருணாச்சலம் அவர்களின் வைணவ, சைவ, பக்தி போன்ற சமயநூல்களும்,
ராஜ்.கௌதமனின் ஆரம்பக் கட்ட முதளாலியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்,  கலித்தொகை – பரிபாடல் விளிம்பு நிலை நோக்கு அவரின் மொழிபெயர்ப்பு நூல்களான பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும், கதைக் கரூவூலம் சமணக் கதைகள், 

இராம.கி யின் சிலம்பின் காலம் 

எம் . வேதசகாயகுமாரின் புனைவும் வாசிப்பும் 

ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள், இந்திய ஞானம் தேடலும் புரிதலும்,
  அறம் உண்மை மனிதர்களின் கதை

பெ.நிர்மலாவின் தமிழ்ப் பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகளும், 

தி.கு. இரவிச்சந்திரனின் தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும்

சாருநிவேதிதா எக்ஸைல்,

பாமாவின் மனுஷி,தமிழண்ணலின் உரை விளக்கு , ஒப்பிலக்கியம் 

தி.வே.கோபாலையர் கட்டுரைகள் மூன்று தொகுதிகள்,

கார்திகேசு சிவதம்பியின் இலக்கணமும் சமூக உறவுகளும்,

க. கைலாசபதியின் இலக்கியச் சிந்தனைகள், 

அ. சிதம்பரநாதனாரின் தமிழ் யாப்பியல் உயராய்வு,

பிரான்சிஸ் கிருபாவின் மல்லிகை கிழமை, 

தாணுபிச்சையாவின் உரைமெழுகின் மஞ்சாடிப் பெண்,

பூமணியின் அஞ்ஞாடி, 

மொழிபெயப்பு நூல்களான, மனு ஜோசப்பின் பொறுப்பு மிக்க மனிதர்கள்( மொ.ர் க. பூரண சந்திரன்), இ.எப். ஷூமாஸரின் சிறிதே அழகு(எஸ். யூசப் ராஜா). 


வீ.அரசுவின் இதழ்வழி புதுமைப்பித்தனின் சிறுகதை தொகுப்பும் வாங்கினேன்.


பேராசிரியர் அ. சதீஷூடன் சென்றிருந்தேன் அவர் தொகுத்த கு.பா.ராவின் கட்டுரைகள் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருந்தது. அப்புத்தகம் ஒன்று எனக்கு வழங்கினார்.

காலச்சுவடு, தீராநதி இதழ்களுக்கு சந்தா கட்டினோம்.

ஒரு புத்தக கடையில் சமஸ்கிருத்தின் தாய்மொழி தமிழே  என்னும் ஒரே புத்தகத்தை மட்டும் விற்பனைச் செய்து கொண்டிருந்தார்கள். வியப்பாக இருந்தது.

சில பத்திப்பகங்கள் வாசகர்களிடம் நடந்து கொள்ளும் முறை வருத்ததை அளிக்கின்றது. விருபா இணைய் பக்கத்தின் உரிமையர் குமரன் அவர்களைச் சந்தித்தோம். பல பதிப்பகங்களின் நூல் விவரங்களை தொகுத்து கொடுப்பதில் அவர் காட்டும் ஆர்வம் ஈடுபாட்டினை பதிப்பத்தார் புரிந்து கொள்ளாதது ஏனோ ? நூல்களின் வரவு உடனுக்கடன் இணையத்தில்  ஏற்றப்பட்டால் வாசகர்களுக்கு  நலமாக இருக்கும். இதனைப் பதிப்பகத்தார் புரிந்துகொள்ள வேண்டும்.
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வெளியில் கடைகள் அதிகம் இருந்தன. கழிப்பிட வசதி சரியாக ஏற்படுத்தப்படவில்லை. வாகனங்கள் நிறுத்தி எடுப்பதில் பெரும்பாடாக இருந்தது. உணவு விற்பனை பிரிவில் 50 ரூபாய்க்கு கொடுக்கப்படும் உணவின் அளவு குறைவாக இருப்பதான முனுமுனுப்பு கேட்டது. காத்திருப்போருக்கு சில ஏற்பாடுகளை செய்யலாம் என்று தோன்றியது.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *