அதிகாலை விழித்தெழுந்து மகிழ்வுடன் நீராடி
ஆதித்தன் பட்டொளி கண்டு
இன்பமுடன் வண்ணமிகு புத்தடை புனைந்து
ஈசன் முன் அழகுமிகு கோலமிட்டு அடுப்பமைத்து நெருப்பூட்டி
உவகையுடன் புதுப் பானையில் திருநீரும் சந்தனமும் குங்கும பொட்டுமிட்டு மாவிலையும் மஞ்சளும் கட்டி
ஊட்டமுள்ள கணுக்கரும்பின் சாறெடுத்து பாலோடு நெய்மணக்க பச்சரிசி தேன் கலந்து பொங்களும் பொங்கி
எம் குல தகடூரான் அதியமான் தந்த செங்கரும்பினையும் சுவைத்து
ஏற்றமிகு சொந்தம் பந்தம் சுற்றமும் குவிந்து கொண்டாடிவோம்.
ஐவளமும் பெருக்கிட பொங்கள் திருநாளை பொங்க வைப்போம் செல்வம் தங்க
வைப்போம்.
ஒற்றுமை செழிப்புடன் நம் குலம் வளர்ந்திடவே ஆதித்தனை மகிழ்வுடன் வேண்டிடுவோம்.
ஓங்கார ஓசையுடன் நம் வாழ்வு நிறைந்திருக்க வேண்டிடுவோம் ஈசனை.
உறவினை ஒன்றினைக்கும் இன் நன்நாளில்
இனிமை பொங்கும் பொங்கள் நல் வாழ்த்துக்கள்.
0 Comments