சங்க காட்சி

Oct 31, 2010 | Uncategorized | 0 comments

அவளோ செல்வ செழிப்பில் வளர்ந்தவள். சிறு வயதுடையாள் விளையாட்டுப் பருவத்தினள். அவளுக்குத் திருமணம் முடிகின்றது. புகுந்தகம் செல்லுகின்றாள்.நீண்ட நாட்கள் ஆகின்றது. அவளைக் கண்டு வர அவள் தாய் வருகின்றாள். தலைவியின் நிலையை எண்ணி வருந்தினாலும் வியந்து போகின்றாள். சிறுவிளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்த தன் பெண் இன்று தன் கணவன் குடும்பம் வறுமையுற்ற காலத்தும் தந்தையினுடைய செல்வ செழிப்பை எண்ணாமல், தன் கணவனின் வருவாயை அறிந்து அதற்கு ஏற்றாற்போல தன்னை மாற்றி கொண்டாலே என்று வியக்கின்றாள்.

கணவன் வீட்டில் வறுமை ஒருவேளை உணவுக்குக் கூட பஞ்சநிலை,அதுவும் நீரில் இடையிட்டுக் கிடக்கும் நுண்மணல் போன்ற கஞ்சி இதை உண்ணும் பக்குவத்தை இவள் யாண்டு பெற்றாள். சிறு பிள்ளை என்று எண்ணியிருந்தோமே இப்படி பட்ட அறிவும் நடைமுறை ஒழுக்கத்தையும் எங்கு கற்றாள் எனத் தாய் மனம் எண்ணுகிறது.

சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டும் உணர்ந் தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென,
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்;
ஒழுகுநீர் நுணங்கு அறல் போல;
பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே!(நற்றிணை,110)

இம் மனநிலை இன்று எத்தனைப் பேரிடம் இருக்கின்றது

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *