விருந்தோம்பல்…….

Oct 4, 2010 | Uncategorized | 0 comments

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே(புறநானூறு,18)

உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்( புறநானூறு,95)

ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்;
பலநாள் பயின்று, பலரொடு செல்லினும்,
தலைநாள் போன்று விருப்பினன் மாதோ!(புறநானூறு,110)

நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன்;இன்றிக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்(புறநானூறு,316)

இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது
தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னான்
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இற்பொலி மகடூப் போல, சிற்சில
வரிசையின் அளிக்கவும் வல்லன்(புறநானுறு,331)

தேட்கடுப் பன்ன நாட்படுதேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும் , கோண்முறை
விருந்திறை நல்கி யோனே!அந்தரத்து
அரும்பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பிவண் தந்தோன் பெரும்பிறங் கடையே (புறநானூறு,392)

தனமனைப்
பொன்போல் மடந்தையைக் காட்டி, இவனை
என்போற் போற்றென் றோனே! அதற்கொண்டு
அவன்மறவ லேனே பிறர் உள்ள லேனே.(புறநானூறு,395)

தீந்தொட் நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பிற் பண்ணுப்பெயர்த் தாங்குச்
சேறுசெய் மாரியின் அளிக்கும் நின்
சாறுபடு திருவின் நனைமகி ழானே (பதிற்றுப்பத்து,65)

மீன்பூத்தன்ன வான்கலம் பரப்பி,
மகமுறை மகமுறை நோக்கி,முன்அமர்ந்து
ஆனா விருப்பின் தானின்று ஊட்டி( பெருபாணாற்றுப்படை)

மழவிடைப் பூட்டிய கூழாஅய்த தீம்புளி
செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நன்னாடு(அகநானூறு,311)

……………….. மாலை
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர்உளீரோ ? எனவும்
வாரார் தோழி ! நம்காத லோரே ( குறுந்தொகை,118)

அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்இயல் குறுமகள் (நற்றிணை,142)

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *