சங்க இலக்கியம் கூறும் மழலை இன்பம்

Oct 3, 2010 | Uncategorized | 0 comments

படைப்புப் பலபடைத்து பலரோடு உண்ணும்,
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும்,தொட்டும்,கவ்வியும்,துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே( புறநானூறு,188)

தாமரைத்
தாதின் அல்லி அயலிதழ் புரையும்
மாசில் அங்கை, மணிமருள் அவ்வாய்,
நாவொடு நவிலா நகைபடு தீம்சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன் (அகநானூறு,16)

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப;
செறுநரும் விழையும் செயிர்தீர்காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம் (அகநானூறு,66)

நினநயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின், இனிதோ?
இறுவரை நாட நீ இறந்து செய்பொருளே.(ஐங்குறுநூறு,309)

கிளர்மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச்சா அய்ச்செல்லும்
தளர்நடை காண்டல் இனிது (கலித்தொகை,80)

ஐய!காரும நோக்கினை,அத்தத்தா என்னும் நின்
தேமொழி கேட்டல் இனிது ( கலித்தொகை,80)

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *