மலரும் தற்குறிப்பேற்றமும் -2

Aug 15, 2010 | Uncategorized | 0 comments

சீவக சிந்தாமணியில் தற்குறிப்பேற்ற அணிநலத்துடன் ஒரு காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டியங்காரனின் சூழ்ச்சியால் சச்சந்தன் போரில் மடியவே விசயைக்கு நேரவிருக்கும் துன்பங்களை முன் கூட்டி யறிந்ததே போல் இயற்கையே புலம்பி கண்ணீர் வடிக்கின்றதாம். மரங்களின் இலைகள் மீதும் மலர்கள் மீதும் படர்ந்த பனிநீர்துளிகள் கீழே சொட்டுவது கண்ணீர் வடிப்பதாகவே காட்சியளிக்கிறது என்பதைச் சிந்தாமணியில்,

அந்தோ விசையை பட்டனகொண்
டகங்கை புறங்கை நானாற்போற்
கந்தார் களிற்றுத் தங்கோமான்
கழிய மயிலோர் மயிலூர்ந்து
வந்தாற் போலப் புறங்காட்டுள்
வந்தாள் தமியே யெனமரங்கள்
சிந்தித் திரங்கி யழுவனபோற்
பனிசேர் கண்ணீர் சொரிந்தனவே

என இயற்கை நிகழ்வின் மீது ஏற்றி கூறப்படுகின்றது.

இராமன் அயோத்தி நகரை விட்டுக் காட்டிற்குச் செல்வதை அறிந்ததும் தயரதன் புலம்பி நிற்கின்றான். தயரதனைப் போலவே இயற்கையெல்லாம் இராமனின் பிரிவை பொறுக்கமுடியாமல் புலம்பின என்பதைக் கம்பராமயணத்தில் தற்குறிப்பு அணிநலத்துடன் காட்டிச் செல்லுகின்றார் கம்பர்.

ஆவும் அழுததன் கன்றழுத அன்றலர்ந்த
பூவும் அழுதபுனற் புள்ளழுத கள்ளொழுகும்
காவும் அழுத களிறழுத கால்வயப்போர்
மாவும் அழுதனம் மன்னவனை மானவே.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *