நவ சக்திகள்

Apr 19, 2010 | Uncategorized | 0 comments

மனோண்மணி – பக்குவம் எய்திய உயிர்களை மலத்தினின்று நீக்கிச் சிவத்துடன் சேர்க்கும்

சர்வபூத்தமணி – உயிர்களிலெல்லாம் ஒன்றி உடன் கலந்து நின்று, அவற்றின் புண்ணிய பாவங்களை அகற்றுவிக்கும்.

பலப்பிரதமணி – சூரியனிடத்தில் பதிந்து நின்று தீய கிருமிகளை அழித்து, நல்ல பொருள்கள் பெருகி வளர்வதற்கு ஆக்கம் அளிக்கும்.

பலவிகரணி – சந்திரனிடத்தில் நிலைபெற்ற அமுதத் துளிகளைச் சொரிவித்துப் பயிர்பச்சைகளும் உயிர்த் தொகுதிகளும் தழைத்துச் செழித்தோங்க உதவி செய்யும்

கலவிசரணி – வானத்தில் இருந்த எல்லாப் பொருள்களையும் ஏற்று நின்று அவைகள் தன்னிற் கலந்து இணைய இடம் தந்து நிற்கும்.

காளி – காற்றின்கண் இனிது கலந்து பிராணமயமாய் விளங்கி, உயிர்களுக்கு நலம் விளைவிக்கும்.

இரவுத்திரு – நெருப்பின் கண் தங்கி அதற்கு வெப்பம் அளித்து நிற்கும்.

சேட்டை – நீரில் நிலைபெற்று அதற்றுகுக் குளிர்ச்சியையும் சுவையையும் உண்டாக்கும்.

வாமை – மண்ணில் விளங்கி ஐம்பூதங்களின் இயல்புகளும் செயல்களும் நிகழுமாறு செய்யும்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *