சக்தி வழிபாடு

Apr 17, 2010 | Uncategorized | 0 comments

சக்தியைப் போற்றி வணங்குவது என்பது மிகப்பழங்காலந்தொட்டே இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து வந்துள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி சிந்துவெளி நாகரிகம் ஏறத்தாழக் கி.மு. 4000 ஆண்டுகள் முற்பட்டதாகும். அந்த நாகரிகத்தின் சுவடுகளாக, மொகஞ்ச தாரு ஆரப்பா என்னும் இடங்களில் அகழ்வாராய்சிசகளிற் கிடைக்கப் பெற்ற உலக அன்னையின் மணசிலைகளைக் கொண்டு சக்தி வழிபாடு மிக மகத் தென்னமையானது என்பது புலனாகும்.

தொல்பொருள் ஆராய்ச்சித் துறைத் பேரறிஞர் ஆகிய சர் ஜான் மார்ஷல் சிந்துவெளிப் பகுதியிற் கிடைத்த அன்னையின் சிலைகளைப் போலவே பாரசீகம்,ஏஜியன்,எலம்,மெசப்படோமியா,பிரான்ஸ், காஸ்பியா, பாலஸ்தீனம், சைப்ரஸ், க்ரீட், எகிப்து, துருக்கி முதலிய பல்வேறு பகுதிகளிற் கிடைத்த சிலைகளும் இருப்பதனால், அம்பிகை வழிபாடு மிகப்பழங்காலத்திலேயே பல நாடிகளிலும் பரவியிருத்தல் வேண்டும் என்று விளக்குகின்றார்.

உலகளாவிய நிலையிலிருந்து சக்தி வழிபாடு , பல்வேறு மதங்களிலும் சிறந்தோங்கி வந்துள்ளது. எடுத்துக்காட்டாக அன்னை மரியாள் சிறப்பைக் கொண்டாடுவதன் வாயிலாக கிறித்துவ மதமும், தாராதேவியின் புகழைப் போற்றுவதன் வாயிலாகப் பௌத்தமும் ஒரு வகையில் தாய்த் தெய்வமாகிய சக்தி வழிபாட்டினை உடன்பட்டு ஏற்றுக்கொண்டமையை நன்குணர்த்தும்.
——-தமிழப் பண்பாட்டு வரலாறு

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *