பிள்ளையார் சுழி……..

Jan 17, 2010 | Uncategorized | 0 comments

நாம் எழுதத் தொடங்குவதற்கு முன் ‘உ’ என்னும் எழுத்தை எழுதுவதை வழக்கமாக்க கொண்டுள்ளோம்.இதனை பிள்ளையார் சுழி என்றும்,அது பிள்ளையார் வழிபாட்டின் முதல் சின்னம் என்றும் கூறி அதற்குப் பல்வேறு புராணகதைகளும் கூறப்பெற்றுள்ளன.

பொதுவாக பழங்காலத்தில் தமிழர்கள் ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தனர்.
பனை ஓலைகள் எழுதுகின்ற பக்குவத்தில் இருக்கின்றதா? என்பதைக் கண்டறிய ஏட்டை எழுத்தாணி முனையால் தீண்டிப் பார்பதுண்டு.இங்ஙனம் தீண்டிப்பார்க்கின்ற குறிக்குத் தீண்டற் குறியென்று பெயர்.இந்த தீண்டற்குறியைத்தான் பின்னாட்களில் பிள்ளையார் சுழி என்று கூறும் மரபாக வந்தது.

இவ்வாறு பிள்ளையார் வழிபாடு தமிழகத்துக்கு வருவதற்கு முன்பே ஏடுதீண்டும் வழக்கம் இருந்துள்ளது என்தென்பது ஆறிஞர்கள் ஆய்ந்து கண்ட உண்மையாகும்.மேலும்,புள்ளியில்லாச் சுழி என்பது வெறும் சுழியத்தைக் குறிக்கும்.ஓலைச்சுவடியில் எழுதும் போது புள்ளி வைப்பதில்லை.புள்ளி வைத்தால் ஏடு பொத்து கிழிந்துவிடும்.ஆகவே புள்ளியில்லாமல் வட்டமாக சுழியம் போடுவர்.புள்ளியில்லாச் சுழி என்னும் இச்சொல் வழக்கே பிள்ளையார் சுழியென மருவியிருக்க வேண்டும் என்பது தமிழறிஞர்களின் கருத்து.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *