தேங்காய் எதற்கு தெரியுமா?.

Dec 31, 2009 | Uncategorized | 0 comments

ஒருமுறை கரந்தை கவிஞரான வேங்கடாசலம் பிள்ளை ஒரு நாள் தன நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருக்கும் போது,

“திருமணத்தில் ஏன் தேங்காய் போட்டு தாம்பூலம் கொடுக்கிறார்கள் தெரியுமா ? ” என்று புதிராக கேள்விக்கணையைத் தொடுத்தார்.காரணம் தெரியாது நண்பர்கள் விழிக்க,

நகைப்புடன் அதற்கான விளக்கத்தை அவர் பாணியிலேயே கூறினார்.

” தேங்குதல் என்றால் தங்குதல் என்று பொருள்.தேங்காய் என்றால் இவ்விடத்தில் தங்கியிருக்காதே என்று பொருள்.திருமண வீட்டில் நம் கையில் தேங்காயைக் கொடுத்து விட்டால் போய்வாருங்கள் என்று கூறுவதாகப் பொருள்” என்று விளக்கமளிக்க அங்கு கூடியிருந்த நண்பர்கள் அவரின் நயமானப் பேச்சினைக் கேட்டு மகிழ்ந்தனர்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *