அங்கே போகாதே….

Dec 31, 2009 | Uncategorized | 0 comments

உளவியலின் தந்தை என்று போற்றப்படுபவரான சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒருமுறை தன் மனைவியுடனும் மகனுடனும் வெளியே சென்றார்.

குழந்தையை சற்று விளையாட விட்டு விட்டு ஃபாராய்டும் அவர் மனைவியும் தீவிரமாக எதைப் பற்றியோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.பேசிகொண்டு இருந்த ஆர்வத்தில் விளையாடிக்கொண்டு இருந்த மகனை கவனிக்க மறந்தனர்.

அவர்களுடைய உரையாடல் முடிந்து விளையாடியப் பையனைத் தேடினால் காணவில்லை.இருவரும் சேர்ந்து குழந்தையை எங்கே போயிருப்பான் என்று சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தனர்.கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போது தன் மனைவியைப் பார்த்து ஃப்ராய்ட் கேட்டார்,” நீ அவனை ஏதாவது ஒரு இடத்திற்குப் போக வேண்டாம் என்று கூறினாயா?” என்று கேட்டார்.

“ஆமாம் ! அருகில் உள்ள நீருற்றுன் பக்கத்தில் மட்டும் போகாதே என்று சொன்னேன்!” என்றார்.

இருவரும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது,நீருற்றின் அருகே அவர்களது மகன் விளையாடிக் கொண்டிருந்தான்.இதைக் கண்ட அவரது மனைவிக்கு ஒரே ஆச்சரியம்!
” இங்கே தான் அவன் இருப்பான் என்று எப்படி யூகித்தீர்கள் ” , என்று தன் கணவனைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு அவர் சொன்னார்” நமது குழந்தைகள் நாம் எங்கு போகக் கூடாது என்று சொல்கிறோமோ அங்கு தான் முதலில் போவார்கள்! குழந்தைக்ள மட்டுமல்ல பெரியவர்களும் அப்படித்தான் ” என்று கூறினார்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *