சொற்பொழிவு

Dec 30, 2009 | Uncategorized | 0 comments

இன்று அண்ணமலைப் பல்கலைக்கழத் தமிழியல் துறையில் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார் பெயரில் தொடங்கப்பெற்றுள்ள அறக்கட்டளையின் சார்பில் பேராசியர் ப.மருதநாயகம் சொற்பொழிவாற்றினார்.

காலையில் துறைத்தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்கள் தலைமைதாங்க தமிழின் செவ்வியல் தகுதிகள் என்னும் தலைப்பில் பேரா.ப.மருதநாயகம் கருத்துரையாற்றினார்.

பிற செவ்வியல்மொழி இலக்கியங்களில் இல்லாத சிறப்பு தமிழில் உள்ளவற்றையும்,தமிழின் சிறப்பினை மேலைநாட்டார் எடுத்துக் கூறிய திறத்தினையும் எடுத்துரைத்தார்.

பன்மொழி வல்லுநராகத் திகழும் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் பிறமொழிகளோடு தமிழினை ஒப்பிட்டுத் தமிழ் மொழி உயர்ந்த ;பிறமரபுகளுக்குக் கடன்படாத ; தன்னளவில் நிறைவு கொண்ட ஒரு மொழி என்று கூறியதை எடுத்துக்காட்டினார்.

இவர் தமிழின் பால் கொண்ட காதலால் புறநானூற்றினையும் ,கம்பராமாயணத்தில் ஒரு காண்டத்தினையும் மொழிப்பெயர்ந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

இவருக்கு சமஸ்கிரும் பயிற்றுவித்த இங்கால்ஸ் என்பவர் சமஸ்கிருத மொழியினையும் அதன் இலக்கியத்தினையும் ஆராய்ந்து சமஸ்கிருத்தில் உள்ள சில கவிதை மரபுகள் வேறு எங்கிருந்தோ வந்துள்ளது என்று ஆராய்ந்து கூறியதன் விளைவே, இவரை தமிழ் கற்று அதனை ஆராயத் தூண்டியுள்ளது.

கிரேக்கம்,இலத்தின் ,சீனம் போன்ற செவ்வியல் மொழி இலக்கியங்களில் இல்லாத சிறப்பு,தமிழுக்கு உண்டு என்றும் தமிழில் பயின்று வந்துள்ள தன்னுணர்ச்சிப் பாக்கள் பிற செவ்வியல் மொழிகளில் சிறந்து விளங்கவில்லை என்றும்,காப்பியத்திற்கும்,துன்பவியல் கவிதைகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை எடுத்தியம்பினார்.

சாக்ரட்டீஸ் அவருடைய மாணவர் பிளாட்டோ அவருடைய மாணவர் அரிஸடாட்டில் அனைவருமே தங்களது படைப்புகளில் அக்காலத்தில் நிலவிய அடிமை முறையினைப் பற்றிய எங்கும் குறிப்பிடவில்லை.அதுபோலவே அவர்கள் அனைவருமே பெண்களை மிக இழிவாக பேசியுள்ளனர்.அதனோடு பெண்களைத் தாழ்த்தி எண்ணவேண்டும் என்பதற்காகவே பெண்ணிற்கு முப்பத்தியிரண்டு பற்கள் கிடையாது என்பதை நம்பிக்கை அடிப்படையிலேயே கூறியுள்ளனர்.பெண் பிறப்பே தீண்டதகாத பிறப்பு என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்துள்ளது.ஆனால் தமிழ் சங்க இலக்கியங்கைப் பார்க்கும் போது பெண்களை இழிபொருளாக கருதும் தன்மையினைப் பார்க்க முடியாது.

அது போலவே உள்ளுறை ,இறைச்சி என்னும் குறிப்பாக பொருள் உணர்த்தக் கூடிய இலக்கிய நுட்பங்களும் கிரேக்க இலக்கியங்களில் காணப்படவில்லை எனபதையும் சுட்டிகாட்டினார்.

தொல்காப்பியர் கூறும் பொருளதிகார இலக்கணம் வேறு எம்மொழியிலும் இல்லாத சிறப்பு என்றும்,எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம்,பொருளதிகார்ம் என்பவை முறையே எழுத்துப்பால்,சொற்பால்,பொருட்பார் என்று தான் பிரிக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் .பின்னார் இப்படி திரிந்து விட்டது .காரணம் அதிகாரம் என்பது வட மொழிச் சொல் என்று விளக்கினார்.

மாலை அமர்விற்கு பேராசிரியர் மு.வள்ளியம்மை அவர்கள் தலைமை ஏற்க காளிதாசரின் படைப்புக்களில் சிலம்பின் செல்வாக்கு என்னும் தலைப்பில் பொழிவினை வழங்கினார்.

காளிதாசரின் குமாரசம்பவ காப்பியத்திற்கு அடிப்பதையாக பரிபாடலும் ,திருமுருகாற்றுப்பையுமே எனபதைக் கூறி அதற்கான காரணத்தை எடுத்துக்காட்டினார்.

பெரும்பாண்மையான உவமைகள் நங்க இலக்கியங்களில் இருந்தே காளிதாசர் எடுத்துளார் என்று கூறினார்.
பரிபாடல் சொல்லும் பொருளும் என்றும் கடலும் கானலும் என்றும் கண்ணனையும் பலராமனையும் கூறும் உவமையை காளிதாசர் உள்வாங்கிக் கொண்டு அப்படியே தமது இலக்கியத்தில் பதிவிசெய்கினாறார்.சிவனையும்,பார்வதியையும் கூற வந்த காளிதாசர் வாக்கும் அர்த்தமும் போல இருந்தார்கள் என்று குறிப்பிடுகின்றார்.

அது போலவே அடி முதல் முடி வரை பாடும் சங்க மரபினைப் பின்பற்றியே காளிதாசரும்குமாரசம்பவத்தில் பார்வதிதேவியை வருணிக்கின்றார்.

இப்படி சங்க இலக்கியத்தின் தாக்கம் காளிதாசரின் படைப்புகளில் இருப்பதைப் பல சான்றுகளுடன் மொழிந்தார்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *