பொதுவுடமைத் தோழர் ப.ஜீவானந்தம் ஒரு முறை ஒரு மண்டபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டுருந்தார்
அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக மின் தடை ஏற்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த மக்களில் பலர் விளக்கு விளக்கு என்று குரல் எழுப்பினர்.
அந்த இருட்டிலும் ஜீவா அவர்கள் நகைச்சுவையுடன் ‘ தோழர்களே ! நான் உங்களுக்குப் பல செய்திகளை விளக்குவதற்காக வந்திருக்கின்றேன்.இத்தனை நேரம் உங்களுக்கு அவைகளை விளக்குவதற்காக உரையாற்றி வருகின்றேன்.எரிந்த விளக்குகள் வராவிட்டால்கூட,நான் உங்களுக்கு விளக்குவேன்.ஆகவே,அணைந்து போன விளக்கு பற்றி கவலைப்படாமல் நான் விளக்குவதைக் கேளுங்கள் ‘ என்று கூறினாராம்.
உடனே கூட்டத்தில் இருந்து சிலர் விளக்கு இல்லை என்றால் நீங்கள் விளக்குங்கள் என்று குரல் கொடுத்தனர்.
0 Comments