சிஷ்யன் என்றால்…

Dec 4, 2009 | Uncategorized | 0 comments

சிறுகதை இலக்கியத்தில் புதிய திருப்பத்தினை ஏற்படுத்தியவரும்,சிறுகதையின் தந்தை என்று போற்றப்படுபவருமான புதுமைப்பித்தனைச் சந்திக்க ஒரு புதிய எழுத்தாளர் ஒருவர் வந்தார்.வந்தவருக்கு எப்படியாவது புதுமைப்பித்தனைப் பாராட்டி,குளிர்வித்துவிடவேண்டும் என்று நினைப்பு ஏற்றபட்டது.அவருக்கு நன்றாக அறிமுகமில்லாத அந்த புதிய எழுத்தாளர்,புதுமைப்பித்தனைப் பார்த்து,ஐயா! நான் உங்கள் சிஷ்யன் உங்களைப் பின்பற்றி எழுதுகின்றேன் என்றார்.

உடனே புதுமைப்பித்தன் அவரைப் பார்த்து கடுப்பாக சொன்னார் ,’நண்பரே! சிஷ்யன் என்றால் என்ன என்று தெரியுமா? சிஷ்யன் என்று கூறாதீர்கள் என்றார்.

புதிய எழுத்தாளருக்கு குழப்பமாகிவிட்டது.ஏன் இவர் சிஷ்யன் என்று கூறவேண்டாம் என்கின்றார் என்று எண்ணிக்கொண்டு இருந்தார்.

அவர் எண்ணத்தை உணர்ந்த புதுமைப்பித்தன் ‘சிஷ்யன் என்றால் மண்டையில் மாசாலா இல்லாதவன் என்று பொருள்’ என்றாரே பார்க்கலாம்.

அந்த புதிய எழுத்தளார் முகத்தில் அசடு வழிய சொல்லாமல் கொள்ளாமல் நழுவி சென்றுவிட்டார்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *