ஏடெடுத்தேன் எழுத எனை எழுதென்றது வான் என்பான் பாரதிதாசன்.எழுதவேண்டுமென வந்தவுடன் எனை எழுது என்றது குறள்.ஒரு அழகான குறள்.
களவு காலம் அப்பொழுது விழி முந்து கொண்டு தலைவனைக் கண்டு இன்புற்று,அவனைக் கண்டு நாணியது.கண்ணோடு கண் நோக்கிய பிறகு காதல் வளர்ந்தது.அது கற்பில் முடிந்தது.
திருமணம் நடந்து விட்டது.தலைவன் பொருள் காரணமாக அவளை விட்டு பிரிந்து செல்கின்றான்.அவன் வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற காலமும் வந்து விட்டது.ஆனால் தலைவன் வரவில்லை.
உடனே அவளுடைய உடல் பசலை கொள்கின்றது.இணவு உட்செல்லவில்லை.கண் கலங்குகின்றது.உடனே தலைவி கண்ணைப் பார்த்து கூறுகின்றாள்.நீ தானே முதலில் அவரைக் கண்டாய்.நீ பார்த்ததால் தானே எனக்கு இந்த நிலை நன்றாக அழு உனக்கு வேண்டியது தான்
என்கின்றாள்.
பாருங்களேன் அந்த குறளை.
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
0 Comments