குழந்தைகளின் ராஜாவான ரோஜா சூடிய முன்னால் பிரதமர் ஜவர்கலால் நேரு ஒருமுறை சுதந்திரப்போராடத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அப்பொழுது உணவில் ஏராளமான கற்கள் இருந்தன என்று சிறைவாடனிடம் புகார் செய்துள்ளார்.
சிறைவாடன் நேருவை கிண்டல் செய்யும் முகமாக ‘ சுதந்திரப் போராட்டக் கைதியாக நீங்கள் வந்திருக்கிறீர்கள் .உங்களுக்கு உணவில் கல் இருப்பது பெரும் பிரச்சனையா? இந்த நாட்டை நேசித்து தானே நீங்கள் இங்கு வந்தீர்கள் என்று நான் நினைத்தேன் ‘ என்றார்.
நேரு அவருக்குச் சரியான பதிலடி கொடுக்க எண்ணி ‘நாங்கள் எங்களது நாட்டையும் மண்ணை நேசிக்கின்றோம் என்பது உண்மையே ! அதனால் தான் அந்த மண்ணைத் தின்பதற்கு நாங்கள் விரும்பவில்லை ! என்றார்.
0 Comments