நகைச்சுவை நடிகரும்,தமது படங்களின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவருமான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தில் நடிக்கும் போது’காக்கையைச் சமைத்து கருவாடு மென்று தின்பார்கள் படித்தவர்கள்’ என்றார்.
இதைப் பார்த்த அவர் நணபர் ஒருவர் அவரிடம் கேட்டார்,நீங்கள் படத்தில் கொடுத்துள்ள விளக்கம் வேடிக்கையாக இருக்கிறதே! அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.காக்கையைப் பொதுவாக கறியாக சமைத்துச் சாப்பிடுவதில்லை,கருவட்டை மென்று பொதுவாக தின்பதில்லையே? கடித்து தான் தின்பார்கள்.
அதற்கு கலைவாணர் விளக்கம் கூறினார். உணவு பற்றாக்குறை நாட்களில் அதிகம் உண்ணக் கூடாது என்று கருதி படித்தவர்கள் கால் (பங்கு)காயை மட்டுமே கறி சமைத்து உண்பார்கள்.கால் + காய் – காக்காய்
அந்த கால் காயாவது உண்ணாவிட்டால் அவர்களது உடம்பு வாடிவிடும் என்பதற்காக அதை உண்பார்கள்.’கரு’ பிறந்த உடம்பு ‘வாடும்’ எனுற தின்பார்கள். கரு + வாடும் + மென்று = கருவாடுமென்று தின்பார்கள் என்று விளக்கம் அளித்தாராம்.
விளக்கம் கேட்ட நண்பர் பொருள் புரிந்து அமைதியாக சென்றாராம்.
0 Comments