மேலைநாடு சென்று இந்திய ஆன்மீகத்தின் புகழை நிலைநிறுத்திய சுவாமி விவேகானந்தர் தத்துவஞானி மட்டுமல்லாது,நல்ல திறமிக்க உடற்கட்டையும்,கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்டவர்.
ஒருமுறை கல்கத்தா நகர வீதியில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது வெறிபிடித்த முரட்டுக்காளை ஒன்று துள்ளிக் குதித்து ஆர்பாட்டமாக பாய்ந்து வந்தது.அதனைக் கண்டோர் அனைவரும் நாலாதிசையிலும் பறந்தோடினர்.எதிர்பட்டவர்களை அக்காளை துவம்சம் செய்து வந்துகொண்டு இருந்தது.
எதிர்பாராத நிலையில் அக்காளை விவேகானந்தருக்கு நேர் எதிரே வந்து நின்றது.அதனைச் சற்றும் எதிர்பார்க்காத விவேகானந்தர் சிறிதேனும் கலக்கம் கொள்ளவில்லை.இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு அந்த காளையின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டு சற்று நேரம் நின்று கொண்டு இருந்தார்.
பாய்ந்து வந்து காளை இவரின் தீட்சண்யமான பார்வையைக் கண்டதும் ஏதோ ஒன்றுக்கு கட்டுப்பட்டதைப் போல அசைவற்று நின்றது.பின்னர் வந்த வழியே அமைதியாகத் திரும்பி போய்விட்டது.
இக்காட்சியைக் கண்டோர் வியந்து,விவேகானந்தரிடம் காளை உங்கள் எதிரில் வந்த போது நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு விவேகானந்தர் சொன்னார் ‘தன்னுடைய கூர்மையான கொம்புகளைக் கொண்டு அந்தக் காளை என்னைக் குத்தி தூக்கி எறிந்தால் நான் வானத்தின் எவ்வளவு உயரம் போவேன் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்’ என்று.
0 Comments