காந்தி வாழ்வில்……………..

Oct 28, 2009 | Uncategorized | 0 comments

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சம்பரான் என்ற இடத்தில்தாகாந்தி முதன் முதலாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி வெற்றிப்பெற்றார்.அங்கு வெள்ளைக்காரத் தோட்ட முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிகள் சார்பாக அவர் போராட்டத்துக்குச் சென்றார்.வெள்ளைக்காரத் தோட்ட முதலாளிகள் அவர் மீது மிகுந்த கோபமாக இருந்தனர்.
ஒருநாள் நள்ளிரவில் ஒரு வெள்ளைக்காரத் தோட்ட முதலாளியின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார் காந்தி.முதலாளி வெளியே வந்து கதவைத் திறந்தார்.

முதலாளி நீங்கள் தானே என்று கேட்டார் காந்தி.

ஆமாம் நான்தான் ! ஆனால் நீ யாரென்று எனக்குத் தெரியவில்லையே என்றார் முதலாளி.அவர் அதற்கு முன்பு காந்தியைப் பார்த்தது இல்லை.

நான்தான் காந்தி என்னைக் கொல்வதற்காக நீங்கள் ஏற்பாடு செய்வதாகக் கேள்ளவிப்பட்டேன்.அதற்காக ஆள்களைத் தேடிக்கொண்டு இருப்பதாகவும் தெரிந்து கொண்டேன்.உங்களுக்குத் தொல்லை எதற்கு என்றுதான் நானே நேரில் வந்து உங்கள் முன் நிற்கின்றேன்.இப்போது நீங்கள் என்னைக் கொல்லாம் என்றார் காந்தி.

முதலாளி அதிர்ச்சி அடைந்தவராக் உங்களைப் பார்த்தப்பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன் என்று பதில் சொன்னான்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *