அறுவை கதை

Oct 20, 2009 | Uncategorized | 0 comments

என்னங்க அறுவை என்றவுடன் உங்களை எதுவும் சொல்லி அறுக்க போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.அறுவை என்றால் துணி என்று பொருள்.தமிழ்நாட்டில் துணியினுடைய பயன்பாடு எப்படி இருந்து எனபதைப் பற்றி தான் பார்க்கப்போகின்றோம்.அதனை அதனுடைய வாயில் இருந்தே கேப்போமா!

இன்று எத்தனையோ விதவிதமாய் நான் பவனி வந்தாலும் ,அரம்பத்தில் தமிழ்நாட்டில் பருத்திதுணியா மட்டும் தான் இருந்தேன்.பருத்தி இந்த பகுதியில் நிறைய விளைந்தது.அதனால் நூல்நூற்கும் தொழிலும்,நெசவு தொழிலும்,அதனை விற்றகும் வணிகத் தொழிலும் நன்றாக இங்கு நடைபெற்றது.இங்கு மட்டும் இல்லாமல் என்னை அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளார்கள்.இந்த செய்தி சங்க இல்க்கியத்தின் மூலம் தான் என்னால் அறிந்து கொள்ளமுடிந்து.

கல்சேர்பு இருந்த கதுவாய் குரம்பைத் தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்தி(அகம்,129-6,8)

பருத்திவேலி கருப்பை பார்க்கும்,புன்புலந்தழிஇய அங்குடிச் சீறூர்(புறம் 304,7,8)

காஞ்சியின் அகத்துக் கரும்பருத்தி யாக்கும் தீம்புனல் ஊரன் (அகம்,156-6,7)

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்(புறம் ,290)

கோடைப் பருத்தி வீடு நிறைபெந்த மூடைப்பண்டம் இடை நிறைந்தனன்(புறம் 393;12,13)

வில் அடித்து கொட்டை நீக்கப்பட நான் அழகான பஞ்சுமேகம் போல் காட்சியளித்தேனாம்.

வில்லெலி பஞ்சின் வெண்மழை தவழும்(அகம் 133,6)

அக்காலத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே என்னை அதிகம் பஞ்சாக எடுத்து நூலாக நூற்றுள்ளார்கள்.அதுவும் இரவில் விளக்கு கூட ஏற்றி வைத்துக்கொண்டு நூற்றுள்ளார்கள்.

பெண்டிர் தாளிர் செய்த நுணங்கு நுண்பனுவல்(நற்றினண,353)

பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கம்(புறம்,326)

என் நூலினைக் கொண்டு முரட்டு துணியும் செய்துள்ளார்கள் அதே தேரத்தில் மெல்லிய பாம்பு தோல் போன்ற துணியையும் நெய்துள்ளார்க்ள.

நுழை மருங்கறியா நுழை நுற் கலிங்கம் (மலைபடு,156)

பாம்புரித் தன்ன பொன்பூங் கலிங்கம் (புறம்,397)

போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன அகன் றுமடி கலிங்கம் (புறம் 393)

நோக்கு நுழைகல்லா நுண்மைய போக்கனிந்து அரவிரியன்ன அறுவை (சிறுபாண் ,236)

கி.பி.மூன்றாம் நூற்றாண்டளவில் கலிங்கத்திற்குச் சென்று வியாபாரம் செய்துள்ளார்கள் என்ற செய்தினை ஹத்தி கும்பாகுகைச் சாசனம் மூலம் அறியமுடிகின்றது.அங்கு வணிகத்துக்குச் சென்ற அவர்கள் அங்குள்ள துணிவகைகளையும் பெற்று வந்துள்ளனர்.அதனால் எனக்குப் பெயர் கலிங்கம் என்றும் ஆயிற்று.சங்க இலக்கியங்கள் கலிங்கம் என்ற சொல்லாட்யினைக் கொண்டே அழைத்துள்ளன.

தீவாவளி வந்தாலும் திருமணங்களுக்கும் பட்டு முதன்மை இடம் பெறுகிறதே அது எங்கிருந்து வந்தது தெரியுமா?

நம்முடைய தமிழ்நாட்டு வாணிகருக்ள சாவகத் தீவிற்கு வாணிகம் செய்யச் செல்லும் போது அங்கு சீனாவில் இருந்து வந்த பட்டு துணியினைக் கண்டு அவற்றை வாங்கி வந்து இங்கு விற்றுள்ளனர்.
இது இன்று நேற்று நிகழ்ந்தது அல்ல சங்க காலத்திலேயே நிகழ்ந்துள்ளது என்பதை சங்க இலக்கியத்தில் வழி அறியலாம்.

பட்டு நீக்கி துகில் உடுத்தும்(பட்டினப்பாலை,105)

கொட்டைக் கரைய பட்டுடை (155)

அரத்தப்பூம்பட்டு அரை மிசை உடீஇ (சிலப்பதிகாரம்(4;8)

இங்கு வந்த பட்டு போன்ற பொருள்களை இங்கு மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கும் பாண்டிய நாட்டுத் தொண்டி துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பெற்றுள்ளது.

ஓங்கிரும் பரப்பின்
வங்க வீட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகு கருபூரமும் சுமந்துடன் வந்து
கொண்டலொடு புகுந்து(சிலம்பு 14;10-110)

தமிழ்நாட்டில் என்னை பல வண்ணங்களிலும் சாயம் பூசப்பட்டாலும்,வெண்மை நிறத்தை தான் அதிகம் விரும்பி அணிந்தார்கள்.(இப்பொழுது வெள்ளையுடை கட்சிகார்ரகளுக்கு மட்டும் என்று முத்திரை குத்திவிட்டீர்கள்)

துணிகளை விற்கும் வணிகர்களுக்கு அறுவை வணிகர் என்று கூறுவர்.மதுரையில் இருந்த உளவேட்டனார் என்னும் புலவர் துணி வணிகம் செய்த்தால் அவருக்கு அறுவை வாணிகன் இளவேட்டனார் என்னும் பெயரும் ஏற்பட்டது.(துணி செய்த பிறகு அறுப்பதால் அதற்கு அறுவை என்று பெயர்).ஏதோ எங்கதையை உங்களிடம் கூறினேன்.இதில் வேறு ஏதாவது இருந்தாலும் கூறுங்கள் எனக்கே சில மறந்தும் போயிருக்கலாம்.(ஏன் நான் எவ்வளவு பழைமை)

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *