மிளகின் கதை

Oct 19, 2009 | Uncategorized | 0 comments

நான் தாங்க மிளகு என்னைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்லாம் என்று இருக்கிறேன்.நான் எவ்வளவு பழமையாவள் என்பது உங்களுக்குத் தெரியுமா?என்னை யார் யார் எல்லாம் விரும்பி வாங்கினார்கள் தெரியுமா?என்னுடை பிறப்பிடம் என்னுடைய சிறப்பு இதுவாது உங்களுக்குத் தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள்.

எதுவுமே ஆதாரத்துடன் சொன்னால் தானே நீங்கள் நம்புவீர்கள்,நான் பழமையானவள் என்பதற்குக் கட்டியம் கூறும் நம்முடைய பழமையான சங்க இலக்கியம்.வாங்க கொஞ்சம் பார்த்துவிட்டு என்னைப் பற்றி சங்க இலக்கியம் என்ன சொல்லுதுனு பார்ப்போம்.

எனக்கு எப்பொழுதுமே உணவில் மிக முக்கிய இடம் உண்டு. உணவில் நஞ்சிருந்தாலும் அதனை முறிக்கும் திறனும் உள்ளது.அதனால் தான் எதிரி வீட்டில் சாப்பிடுவிட்டு வந்து நாலு மிளகைச் சாப்பிட்டால் போதுமென இன்றும் கிராமப் பகுதியில் கூறுவார்கள்.எல்லா இடத்திலையும் நான் விளைந்து விடமாட்டேன்.மலை சாரல் பகுதிதான் மிகவும் பிடித்த பகுதி.

அதனால் தான் முன்பிருந்த சேரநாட்டில் மலைச்சாரல் பகுதியில் வளர்ந்தேன்.அங்கு மட்டும் இல்லாமல் கிழக்கிந்திய தீவுகளாக இருந்த சாவக நாட்டிலும் வளர்ந்தேன்.ஆனாலும் சேர நாட்டில் வளம் மண்ணின் தன்னமையால் நல்ல மணமுள்ள மிளகாக என்னால் இருக்க முடிந்து.அதனால் சாவக நாட்டின் மிளகைவிட சேரநாட்டி மிளகையே அதிகம் வெளிநாட்டவர் வாங்கி சென்றுள்ளனர்.
எனக்கு வேறு பெயரும் இருக்கிறது .என்னை கறி என்றும் மிரியல் என்றும் அழைப்பர்.என்னை ஐரோப்பிய கண்டத்தில் இருந்து வந்த யவனர்கள் அதிமாக விரும்பி வாங்கி சென்றதால் யவனப் பிரியா என்ற பெயரும் உண்டாகிவிட்டது.

நான் கொடியாக பலாமரத்தின் மீதும் ,சந்தனமரங்கிளன் மீதும் மலைகளின் உள்ள சிறு செடிகள் மீதும் ஏறி படர்வேனாம்.

பைங்கறி நிவந்த பலவின் நீழல்(சிறுபாணாற்றுப்படை,43)

கறிவளர் சாந்தம் (அகநானூறு,2)

கறி வளர் அடுக்கம் (குறுந்தொகை,288)தோட்டங்களாகவும் பயிரிடப் பட்டு இருக்கின்றேன்.

துறுகல் நண்ணிய கறியிவர் படப்பை (அகம்,272)

காய்கறி சமைக்கும் போது என்னையும் கறிவேப்பிலையும் பயன்படுத்தியிள்ளார்கள்.

பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளையீ(பெருபாணாற்றுப்படை,(வரி 307,308)

தமிழகத்தின் மேற்கு கரையில் விளைந்த என்னை ,கிழக்குக் கடற்கரையோரமாக சிறந்து விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு வண்டிகளிலும் பொதிமாடுக்ள மேல் ஏற்றியும் கொண்டு வந்துள்ளனர்.அப்படி ஏற்றி வரும் வழியில் சுங்க சாவடியில்,அரசு ஊழியர்கள் வரியும் வாங்கியுள்ளனர்.

காலில் வந்த கருங்கறி மூடை(பட்டினப்பாலை,186)

தடவிநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
அணர்ச்செவி கழுதைக் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழி (பெருபாணாற்றுப்படை,77-800

மேலைநாட்டினர் மரக்கலங்களில் வந்து பொற்காசுகளைக் கொடுத்து என்னை வாங்கி சென்றுள்ளனர்.இதனைப் பார்த்த தாயங்கண்ணரும்,பரணரும் தமது பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.

சேரலர்
கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ( அகநானூறு,149)

மன்கைகுவைஇய கறிமூடையால்
கலிச்சும்மைய கரைகலக் குறுந்து கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியால் கரைசேர்க்குறுந்து (புறநானூறு,343)

யவனர்கள் பெரும்பாலும் என்னை வாங்குவதற்றகாவே கடல் கடந்து வந்திருக்கின்றனர்.நம்நாட்டில் விளைந்த நல்ல மிளகினை ஏற்றமதி செய்துவிட்டு பற்றாக்குறைக்குச் சாவகத்தில் இருந்தும் இறக்குமதி செய்துள்ளோம்.(நமக்குத் தான் பிறருக்கு வழங்கும் மனது தாராளமாக இருக்கிறதே)

மிளகாயின் வரவிற்குப் பிறகு என்னுடைய பயன்பாடு குறைந்தா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.இப்பொழுதும் உணவில் எனக்கு தனி இடம் உண்டு.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *