தீராத பகை கொண்ட இருவரைக் குறிப்பிடும் போது அவர்கள் இருவரும் எப்பொழுதும் கீரியும் பாம்பும் போல இருப்பார்கள் என்று கூறுவது வழக்கம்.
இன்றைக்கும் பாம்புக்கும் கீரிக்கும் இடையே சண்டை நடைப்பெறுவதைக் கிராம்புறங்களில் காணலாம்.இச் சண்டையில் சில நேரங்களில் பாம்பு இறக்கும் சில நேரங்களில் கீரி இறப்பதும் உண்டு.எப்பொழுதாவது மட்டும் இப்படி நிகழும்.
பொதுவாக பாம்பு மனிதனைக் கொத்தினால் இறந்துவிடுகிறான் . ஆனால் பாம்பு கீரியைக் கொத்தினால் இறப்பதில்லை பெரும்பாலும் காரணம்,
மனித மூளையில் தகவல்களை அனுப்பக்கூடிய அணு மூலக்கூறு ஒன்று உள்ளது.பாம்பு கொத்துவதால் மனித உடலினுள் கலக்கும் நஞ்சு இம்மூலக்கூற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.இதனால் மனிதன் இறக்கின்றான்.
இதே மூலக்கூறுகள் பாம்பு ,கீரி இவற்றிற்கு ஒன்று போலவே இருக்கும்.மேலும் கீரியின் உடலில் ஒரளவிற்கு நஞ்சு எதிர்ப்புத் தன்மை இருக்கும்.இதனால்தான் அதிக நஞ்சற்ற பாம்புகள் கொத்தினால் கீரி இறப்பதில்லை.ஆனால் நஞ்சு மிகுந்த பாம்புகள் கொத்தினால் கீரிகள் இறந்து விடும்.
பாம்பால் கொத்தப்பட்ட கீரி நஞ்சினை முறிக்க அருகம்புல்லை உண்பது உண்டு.சிலவகை வேர்களைக் கடித்துக் கீரிகள் தம் பற்களைக் கூறாக்கி கொள்ளுமாம்.
இதே போன்ற பழமொழிகள்
பாம்புக்கும் கீரிக்கும் தீராப் பகை
அரவத்தைக் கண்டால் கீரி விடுமா?
இன்றும் வழக்கில் உள்ளன.
0 Comments