சிலேடை நயம்..

Oct 17, 2009 | Uncategorized | 0 comments

பண்டைய புலவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது அதிக சிலேடை நயம் ததும்ப பேசிக்கொள்ளுவது உண்டு .அதனைக் கேட்போருக்கு முதலில் புரியவில்லை என்றாலும் ,அதன் பொருள் தெரிந்த பின்பு அப்பொருளினைச் சுவைத்து மகிழ்வர்.

ஒருமுறை யாழ்பாணத்துப் புலவரும் உரைநடையின் தந்தை என்று சிறப்பிக்கப்படுபவருமான ஆறுமுக நாவலர் அவர்கள் , மீனாட்சி சுந்தரம் பிள்ளை(உ.வே.சா வின் ஆசிரியர்)
அவர்களை மதுரையில் சந்தித்தார்.அப்போது இருவரும் அளாவி மகிழ்ந்தனர்.மறுநாள் காலை அவர்கள் இருவரும் தம் மாணக்கருடன் ஆற்றுக்கு நீராடச் சென்றனர்.அது பனிக்காலம்.பனிக்கொடுமையால் மிகுதியாக வாடிய ஆறுமுக நாவலர் அவர்கள் பிள்ளையை நோக்கி ஐயா பனிக்காலம் மிகக் கொடிது என்றார்.

உடனே பிள்ளை அவர்கள் ஆம் என்று கூறாமல்.நான் பனிக் காலம் நல்லது என்பேன் என்றார்.
மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.ஆறுமுக நாவலரோ பனிக் காலம் கொடுமை என்று கூற பிள்ளை அவர்களோ பனிக்காலம் நல்லது என்று கூறுகிறார்களே ஏதேனும் உட்பொருள் இருக்குமோ என்று எண்ணி மாணவர்கள் அவரை நோக்க பிள்ளை அவர்க்ள நான் ஆறுமுக நாவலர் அவர்கள் கூறியதை மறுக்கவில்லையே ,அவர் பனிக்காலம் மிகக் கொடிது என்றார்.
பனிக்கு ஆலம் மிகவும் நல்லது என்றேன் நான்.ஆலம் என்றால் விடம் தானே!இப்பனிக் கொடுமைக்கு விடம் நல்லது என்பது தானே என் உரை என்றார்.

ஒரு எளிய உரையாடலுக்குள் இத்தனைப் பொருள் பொதிந்துள்ளதா என்று மாணவர்கள் வியந்தார்களாம்.பாருங்கள் நம் புலவர்களின் சிலேடைத் திறமையை எண்ணி எண்ணி வியக்கும் படி உள்ளதல்லவா.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *