இந்நிலையினைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்தித்த வள்ளுவப் பெருந்தகை
தாம் இயற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பத்திலும் இறைவனைப் பற்றிய எந்த குறிப்பும் தரவில்லை.(கடவுள் வாழ்த்தினை வள்ளுவர் பாடவே இல்லை என்று சிலர் கூறுவர்)பத்துப்பாடல்களில் ஏழு இடங்களில் இறைவனின் அடி சிறப்பை கூறிகின்றாரே ஒழிய கடவுளின் முகத்தினைக் கூறினாரிலர்.நற்றாள்(2),மாண்டி(3),இலானடி(4),தாள்சேர்ந்தார்(7,8),தாள்(9),இறைவனடி(10)
முதல் பாடலில் வரும் பகவன் என்று வரும் சொல் சமணசமயக் கடவுளான அருகனைக் குறிக்கும் அதனால் அவர் சமணசமயத்தவர் என்ற வாதத்தினை முன் வைப்பர்.பிறர் குறள் எங்கள் நமயத்திற்கு உரியது என வருந்து கட்டிக்கொண்டு எழுதுகின்றனர்.அவரர் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கின்றது.தேவநேயப்பாவாணர் பகலவன் எனக்கொண்டு,என்றும் உதிக்கும்,எல்லாருக்கும் பொதுவான ,ஒளியினை வழங்க கூடிய சூரியன் எனக்கொள்ளுவர்.இக் கருத்து ஏற்புடையதாக தானே உள்ளது.
இவற்றையெல்லாம் நாம் மறக்கின்றோம்.சாதி,மதங்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் நமக்கு பெரும் பங்கு இருக்கின்றது.மாற்றம் மெல்ல மெல்ல தான் நிகழும் .அதற்கு நாம் முயலலாமே.வள்ளுவர் கண்ட சமுதாயத்தை மெய்பித்துக் காட்டி வாழ முயற்சி செய்யலாமே.
0 Comments