அருவினை என்ப உளவோ……….

Oct 4, 2009 | Uncategorized | 0 comments

காலப்பெருவெளியில் எத்தனையோ நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் வாழுங்கலையை வாழ்க்கையில் இருந்து பிழிந்து, சாறாய் வடித்துப் பருக கொடுத்திருக்கும் நூல் திருக்குறள். இந்நூல் வாழ்க்கையின் பிழிவாய் இருப்பதனால் தான் உலகப் பொதுமறையாக வாழ்கின்றது. 1330 குறளிகளையும் அவதானிக்கும் போது காலத்தின் தேவைக்கு ஏற்ப கருத்துக்களை உட்செரித்து, தனித்தன்மையுடன் திகழ்வதைக் காணலாம்.

காலம் கண் போன்றது என்பர். காலம் கிடைத்தற்கரிய ஒன்று.அதை நிருவகிக்க இயலாவிட்டால் வேறு எதனையும் நிருவகிக்க இயலாது எனபர் கால நிருவாக மேலாணமை பற்றி நிருவாக மேதை பீட்டர் டிக்கரின்.என்னிடம் எதனை வேண்டும் என்றாலும் கேள் காலத்தைத் தவிர என்றார் காலத்தின் அருமையை உணர்ந்த நெப்போலியன்.நீ தாமதிப்பாய் ஆனால் காலம் தாமதிக்காது என்று காலத்தின் தேவையை வலியுறுத்துவார் பெஞ்சமின் பிராங்கிளின். காலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக இன்றியமையாது.காலத்தை ஒருவன் சரியாக திட்டமிட்டு பயன்படுத்த தொடங்கினால் அவன் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே போவான். இன்று நாம் கால மேலாண்மையைப் பற்றி பேசுகின்றோம்,படிக்கின்றோம்,ஆனால் இரண்டாயிரம் ஆண்டுக்கும் முன் தோன்றிய வள்ளுவ ஆசான் காலத்தின் அருமையை உணர்ந்து ஒவ்வொருவரும் காலத்தின் மதிப்பை அறிந்து எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதை மிக அழகாகத் தமது குறளில் பதிவு செய்துள்ளார்.

காலத்திற்கேற்றார் போல கருவிகளைக் கொண்டு,சரியான காலத்தையும் அறிந்து செயல் பட்டால் ,அவரால் முடிக்க முடியாத செயல் என ஒன்று இருக்கின்றதா ?எனக் கேட்கின்றார் வள்ளுவர்.

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

ஆம் காலத்துக்கு ஏற்ற கருவியினையும் ,அதற்கேற்ற காலத்தையும் பயன்படுத்தும் போது வெற்றி உறுதி. எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் புதிய புதிய வரவுகள் இன்றைய சூழலில் குவிந்து கொண்டுள்ளன. இன்று வாழ்க்கை வேகமாக சென்று கொண்டு இருக்கின்றது, நின்று நிதானித்து பார்ப்பதற்கு நேரம் இல்லை,அதற்கேற்ற நாமும் ஓடவேண்டிய சூழல்.

கல்வி துறையை எடுத்துக்கொண்டால் முன்பிருந்த குலக்கல்வி முறையை இன்று இல்லை.கல்வி துறையில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.இன்று ஒரு மாணவன் ஆசிரியரைப் பார்க்காமலே படித்துப் பட்டம் பெறக் கூடிய வாய்ப்புக்கள் எல்லாம் ஏற்றபட்டு விட்டது.இணையப் பல்கலைக் கழங்கள் இன்றைய தேவையாகவுள்ளன. இதனை அறிந்து இதற்கு ஏற்ப செயல்பட்டால் , குழந்தைகளுக்கு கற்பித்தல் முறையில் எத்தனையோ மாற்றங்கள்,பழமையான இலக்கணங்கள் இலக்கியங்களை புதிய கருவிகளைக் கொண்டு எப்படி கற்பிக்கலாம் என்பதை அறிய வேண்டும் .அதற்கு புதிய கருவிகளின் தொழிநுட்பத்தோடு, பயன்படுத்தும் முறையையும் நாம் அறிந்திருந்தால் தானே அவற்றை மாணவர்களிம் கொண்டு சேர்க்க முடியும்.எப்பொழுதுமே நம்மை புதுப்பித்துக் கொண்டே இருந்தால் ,அதுவே சிறந்த வினையாக இருக்கும்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *