முண்டாசு கவிஞனாய், விடுதலையில் மூர்கனாய் ,முறுக்கிய மீசையுடன் ,தமிழின் காதலனாய்,தமிழகத்தின் தவப்புதல்வனாய் தோன்றியவன் பாரதி.
சுவை புதிது,பொருள் புதிது வளம்புதிது,
சொற்புதிது,சோதிமிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை
பாரதியுனுடைய கவிதை.
உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப்
புது செறி காட்டியவன் பாரதி
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்தால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்,
தமிழகம்,தமிழுக்குத் தரும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
தமிழுக்குப் புத்தொளி பாய்ச்சப் பிறந்தவன் பாரதி எனப் பாடுவர் பாவேந்தர்.
‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல்
இனிதாவது எங்கும் காணும்’
என்றான் பாரதி,
இன்று அந்த தமிழின் நிலை ,தமிழ் பேசினால் தீட்டு என்று பேசமறுப்போர் பெருபான்மையினராகி விட்டனரே….
தமிழ் நாட்டில் தமிழ் முழங்காமல் தமிங்கிலம் அல்லாவா முழங்கி கொண்டு இருக்கின்றது.
பிற மொழிகளை யாரும் எப்பொழுதும் வெறுக்கவில்லை,பல மொழிகளை அறிந்துகொள்ள வேண்டும்.அது தவறில்லை.நாம் தாய்மொழியை மறவாமல் இருக்க வேண்டும்.
பிற மொழியைத் தவறு இல்லாமல் பேசவேண்டும் என்பதில் எத்தனைக் கவனாமாக
இருக்கின்றோம்.ஏன் தம் தாய் மொழியைத் தவறில்லாமல் பேச வேண்டும் என்பதில் கவனம் கொள்ளவதில்லை.அது தான் வேதனை.
தமிழ மக்களுக்கு இயற்கைக் கடவுள்
நிலமும் வச்சான்,
பலமும் வச்சான்
நிகரில்லா செல்லவமும் வச்சான்
ஒன்று வைக்க மறந்திட்டான்
ஒன்று வைக்க மறந்திட்டான்
அதுதான்
புத்தியில்லை! புத்தியில்லை!
(இதில் நாம் மொழியும் வச்சான் நல்ல தமிழ் மொழியும் வச்சான் சேர்த்துக் கொள்ளலாம்)
என்று பாரதி பாடினான்.இன்றும் அந்நிலையே தொடர்கின்றதே….
பாரதியின் நினைவு நாளில் தமிழராகிய நாம் ஒரு சபதம் ஏற்போம்
தமிழை உயர்த்திட
தமிழனாய் மிளிர்ந்திட
நித்தம் உழைப்போம்…
நிமிர்ந்து நடப்போம்….
0 Comments