எப்போ ? என்றாள் அவள்
விரைவில் என்றான் அவன்
சரி போய் வா என விடை கொடுத்தாள்.
நாள்கள் சென்றன ; வாரங்கள் ஓடின;மாதங்கள் கடந்தது;அவன் வரவில்லை.இன்று வருவான் நாளை வருவான் என் ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்தாள் அவள்.அவன் வந்தால் தானே வரவில்லை.என்ன செய்வாள்! பாவம் ! ஏங்கினள்.தூக்கம் வரவில்லை.எந்த நொடி அவன் வருவானோ என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள்.உள்ளம் துடிக்கிறது அவதிபடுகிறாள்.
ஏன் இப்படி அவதி படுகிறாய் என்று கேட்க கூட ஆள் இல்லை.
அருகில் தோழியோ கவலை இன்றி நிம்மதியாக உறங்குகின்றாள்.
வெளியே எட்டிப் பார்க்கின்றாள் ஒரே இருள்.நடு நிசி.எங்கும் அமைதி!அமைதி! ஆள் நடமாட்டமே இல்லை.பேச்சுக்குரல் கூட கேட்கவில்லை.
எல்லோரும் தூங்குகின்றார்களே! அந்த பாழும் தூக்கம் எனக்கு வரவில்லையே என்று ஏங்குகின்றாள்.
ஐயோ! எங்கும் அமைதி நிலவுகிறதே என் மனம் மாத்திரம் அமைதி யில்லாதிருக்கிறதே! என்ன செய்வேன் என்று புலம்புகின்றாள்.
நள்ளென்று அன்றே யாமம்!சொல்அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள்!முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்!
ஓர்யான் மன்ற துஞ்யா தானே! —-பதுமனார்
0 Comments