நினைப்பும் மறப்பும்……..

Aug 31, 2009 | Uncategorized | 0 comments

தலைவியை விட்டு பொருள் ஈட்டும் காரணமாக பிரிந்து மீண்ட தலைவன் தன் காதலியிடம் (மனைவியிடம்)உரையாடுங்கால் முன் பிரிந்த போது விருப்புடன் உன்னை நினைத்தேன் என்று கூறினான்.உடனே அவள் மறந்தால் தானே நினைக்க முடியும்,ஏன் என்னை மறந்தீர் எனக் கேட்டு அவனிடம் புலந்தாள்.

உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.(1316)
நினைப்பதும் மறப்பதுமின்றி எப்பொழுதும் இருக்கவேண்டும் என்ற கருத்தைத் திருமூலரும் தமது திருமந்திரத்தில் பதிவு செய்துள்ளார்.

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற் ற்றுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற் ற்றுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறிலவன் நீறிய னாமே (2970)

இதே கருத்தினைக் கம்பரும் ஆண்டுள்ளார்.
மண்டோதரி இராவணனை இடையறாது எப்பொழுதும் நினைத்திருந்தாள் என்பதைக் குறிப்பிடும் போழுது,
‘நினைத்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்’
என்று கூறுகின்றாள்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *