சங்க நூற்பாடல்களில் பல வகையான கள்வகைகள் காணப்பெறுகின்றன.அக்கால மக்களின் வாழ்க்கையில் மது உண்டு களித்தல் எனபது இயல்பாக இருந்துள்ளது.
கள்ளினைத் தேறல்,நறவு,தோப்பி,அரியல்,வேரி,காந்தாரம்,மட்டு,பிழி எனப் பல்வேறு பெயர்களால் வழங்கியுள்ளனர்.இவற்றுள் சிறுசிறு வேறுபாடு உண்டு.
கள்ளில் தெளிந்து காணப்பெறுவதைத் தேறல் என்று குறிப்பிட்டுள்ளனர்.
நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை கள்ளின் பெயர் நறவு என்றும் தோப்பி என்றும் வழங்கப்பெற்றுள்ளது.
நெற்சோற்றினில் இருந்து இறக்கப்படும் ஒருவகை கள் அரியல்.இதற்கு தேன் என்றும் பொருள் உண்டு.
மூங்கிற் குழாயில் ஊற்றி நிலத்தில் புதைத்து வைத்து முதிரச்செய்தவது மட்டு.
பனை,பலா,தேனிறால் முதலியவற்றில் இருந்து பிழுந்து எடுப்பது பிழி.
0 Comments