சொல்வலை வேட்டுவன்
சங்க இலக்கியத்தில் காணப்பெறும் அழகிய சொற்படைப்பு.
சொல்வலை வேட்டுவன் என்பதற்குப் பொருள் தேர்ந்த சொற்களைக் கொண்டு தனது நாவண்மையால் பிறரைப் பிணிப்பவன் அதாவது கவர்பவன் என்பதாகும்.இது போன்றே சொல்லேருழவன் என்ற சொல்லாட்சியும் இலக்கியத்தில் உள்ளது அதற்கும் இதுவே பொருள்.
இச்சொல்லாட்சி புறாநானூற்றில் காணப்பெறுகின்றது.
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன் (252)
சொல்லேருழவர் என்னும் சொல்லாட்சி குறளில் பயின்றுவந்துள்ளது.
வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை (குறள் ,872)
0 Comments