ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்………
அவஸத்தை —– கர்ப்பாவஸத்தை,ஜன்மாவஸத்தை,பாலியாவஸ்த்தை,யௌவனாவஸ்த்தை,ஜராவஸத்தை,மரணவஸ்த்தை,நரகாவஸ்த்தை
இசை —- குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாரம்
இடையெழுவள்ளல்கள் —– அக்குரன்,சந்திமாண்,அந்திமான்,சிசுபாலன்,தந்தவக்கிரன் கன்னன்,சந்தன்
உலகம் —– பூலோகம்,புவலோகம்,சுவலோகம்,மகாலோகம்,சனலோகம், தவலோகம்,சத்தியலோகம்
உலோகம் —– செம்பொன்,வெண்பொன்,இரும்பு,ஈயம்,வெங்கலம்,தரா
எழுமதநீர் —– கன்னமிரண்டு,கண்ணிரண்டு,கரத்துவாரமிரண்டு,கோசகம் ஒன்று என்னும் ஏழிடங்களிலிருந்து யானைக்கு மதனநீர் தோன்றும்
எழுவகை அளவை —– நிறுத்தல்,பெய்தல்,சார்த்தியளத்தல்,நீட்டியளத்தல்,தெறித்தளத்தல்,தேங்கமுந்தளத்தல், எண்ணியளத்தல்
கடல் —– உவர் நீர்,நன்னீர்,பால்,தயிர்,நெய்,கருப்பஞ்சாறு,தேன்
கடையெழு வள்ளல்கள் —– எழினி,ஓரி,காரி,நள்ளி,பாரி,பேகன்,மலையன்
கீழேழுலகம் —– அதலம்,விதலம்,சுதலம்,ரசாதலம்,மகாதலம்,பாதலம்
கொங்குநாட்டுச் சிவாலயங்கள் —– திருவெஞ்சமாக் கூடல்,திருக்கரூவூர்த் திருவானிலை,திருப்பாண்டி கொடுமுடி,திருச்செங்குன்றூர்,திருநணா,திருமுருகன் பூண்டி,திருப்புக்கொளியூர்
சத்தவிடங்கத்தலம் —– திருவாரூர்,நாகப்பட்டினம்,திருநள்ளாறு,திருமறைக்காடு,திருக்காறாயில்,திருவாய்மூர்,திருக்குவளை
சிரஞ்சீவியார் —– அசுவத்தாமன்,மாபலி,வாயாசன்,அனுமன்,விபீடணன், மார்க்கண்டன்,பரசிராமன்
சுரம் —– ச,ரி,க,ம,ப,த,நி
தாதுக்கள் —– இரதம்,உதிரம்,எலும்பு,தோல்,இறைச்சி,மூளை,சுக்கிலம்
தாளம் —– துருவம்,மட்டியம்,ரூபகம்,சம்பை,திரிபுடை,அடதாளம்,ஏகதாளம்
தீவு —– சம்புதீவு,பிலக்ஷத்தீவு,குசத்தீவு,கிரவுஞ்சதீவு,சாகரத்தீவு,சான்மலித்தீவு,புட்கரத்தீவு
நதி —– கங்கை,யமுனை,சரசுவதி,நருமதை,காவேரி,குமரி,கோதாவரி
நாட்டுக் குற்றம் —— தொட்டியர்,கள்வர்,யானை,பன்றி,விட்டில்,கிள்ளை,பெருமழை
பதார்த்தம் —– திரவியம்,குணம்,கருமம்,சாமானியம்,விசேடம்,சமவாயம்,அபாவம்
பாதகம் —– ஆங்காரம்,உலோபம்,காமம்,பகை,போசனப்பிரியம்,காய்தல்,சோம்பல்
பிறப்பு —– தேவர்,மக்கள்,விலங்கு,புள்,ஊர்வன,நீர்வாழ்வன்,நிற்பன
புரி —– அயோத்தி,மதுரை,மாயை,காசி,காஞ்சி,அவந்திகை,துவாரகை
பெண்கள் பருவம் —– பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை பேரிளம்பெண்
மண்டலம் —– வாயு,வாருணம்,சத்திரன்,சூரியன்,நட்சத்திரம்,அக்கினி,திரிசங்கு
மாதர் —– அபிராமி,மாயேச்சுவரி,கௌமாரி,நாராயணி,வாரகி,இந்திராணி,காளி
முதலெழுவள்ளல் —– குமணன்,சகரன்,சகாரன்,செம்பியன்,துந்துமாரி,நளன்,நிருதி
முனிவர் —– அத்திரி,குச்சன்,கௌதமன்,பிருகு,காசிபன்,அங்கிரா,வசிட்டன்
மேகம் —– சம்வர்த்தம்,ஆவர்த்தம்,புட்கலாவர்த்தம்,சங்காரித்தம்,துரோணம்,காளமுகில்,நீலவருணம்
வித்தியாதத்துவம் —– காலம்,நியதி,காலை,வித்தை,இராகம்,புருடன்,மாயை
0 Comments