தொகைச்சொற்கள்

Aug 13, 2009 | Uncategorized | 0 comments

ஆறு எண்ணிக்கையில் அமைந்து தொகைச்சொற்கள்……

அங்கம் —— படை,குடி,கூழ்,அமைச்சு,நட்பு,அரண்

அந்தணர் தொழில் —— ஓதல்,ஓதுவித்தல்,வேட்டல்,வேட்பித்தல்,ஈதல்,ஏற்றல்

அரசர் தொழில் —— ஓதல் ,வேட்டல்,ஊதல்,ஓம்பல்,படையைப் பயிற்றல்,போர்செய்தாடல்

அரசியல் —— அறநிலையறத்,மறநிலையறம்,அறநிலைப்பொருள்,மறநிலைப்பொருள்,அறநிலை இன்பம்,மறநிலை இன்பம்

ஆதாரம் —– மூலம்,சுவாதிட்டானம்,மணிபூரகம்,அனாதகம்,விசுத்தி,ஆஞ்சை

ஈச்சுரன் முக்கிய குணம் —– சருவஞ்ஞத்துவம்,சருவேச்சுரத்துவம்,சருவநியத்திருத்துவம்,சருவாந்தரியாமித்துவம்,சருவகன்மத்துவம்,சருவசத்தித்துவம்

உட்பகை —– காமம்,குரோதம்,உலோபம்,மோகம்,மதம்,மாற்சரியம்

உவர்ப்பு —– ஆசியம்,இரதி,ஆரதி,சோகம்,பயம்,குற்சிதம்

சக்கரவர்த்திகள் —– அரிச்சந்திரன்,நளன்,முசுகுந்தன்,புருகுச்சன்,புரூரன்,கார்த்தவீரியன்

சாத்திரம் —– வேதாந்தம்,வைசேடியம்,பாட்டம்,பிரபாகரம்,பூர்வமீமாஞ்சை,உத்தரமீமாஞ்சை

சிறுபொழுது —– மாலை,யாமம்,வைகறை,விடியல்,நண்பகல்,எற்பாடு

சுவை —– கைப்பு,தித்திப்பு,புளிப்பு,உவர்ப்பு,துவர்ப்பு,கார்ப்பு

தானை —- தேர்,பரி,கரி,ஆள்,வில்,வேல்

நாட்டமைதி —– செல்வம்,விளைவு,செங்கோல்,வளம்,குறும்பின்மை,நோயின்மை

பருவகாலம் —– கார்,கூதிர்,முன்பனி,பின்பனி,இளவேனி,முதுவேனி

புறச்சமயம் —– உலகாயதம்,பௌத்தம்,ஆருகதம்,மீமாம்சம்,மாயாவாதம்,பஞ்சராத்திரம்

வைசியர்தொழில் —– ஓதல்,வேட்டல்,ஈதல்,ஈட்டல்,பசுவைக்காத்தல்,ஏருழுதல்

ருதுக்கள் —- சித்திரை வைகாசி- வசந்தருது,ஆனி ஆடி – கிரீஷ்மருது, ஆவணி,புரட்டாசி -வருஷருது,ஐப்பசி,கார்த்திகை – சாத்ருது,மார்கழி,தை – ஏமாந்தருது மாசி,பங்குனி – சிசிரருது

———————–தொடரும்

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *