தொகைச்சொற்கள்.

Aug 12, 2009 | Uncategorized | 0 comments

ஐந்து எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்……..

அக்கினி —– இராகம்,கோபம்,காமம்,சடம்,தீபம்,

அகிற்கூட்டு —– சந்தனம்,கருப்பூரம்,எரிகாசு,தேன்,ஏலம்

அங்கம் —– திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம்,கரணம்

அரசர்க்குழு —– மந்திரியர்,புரோகிதர்,சேனாதிபதியார்,தூதர்,சாரணர்

அரசர்க்குறுதிச்சுற்றம் —– நட்பாளர்,அந்தணர்,மடைத்தொழில்,மருந்துவக் கலைஞர்,நிமித்திகர்

அவத்தை —— சாக்கிரம்,சொப்பனம்,சுழுத்தி,துரியம்,துரியாதீதம்

அன்னுவயவிலக்கணம் —- விசேடம்,விசேடியம்,கருத்தா,கருமம்,கிரியை

இலக்கணம் —– எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி

இலிங்கம் —– பிருதிவிலிங்கம்-காஞ்சி,அப்புலிங்கம் – திருவானைக்கா,
தேயுலிங்கம் -திருவண்ணாமலை,வாயுலிங்கம் – சீகாளத்தி,ஆகாயலிங்கம் – சிதம்பரம்

ஈசுரன்முகம் —– ஈயானம்,தற்புருடம்,அகோரம்,வாமம்,சத்தியோசாதம்

உரைஇலக்கணம் —– பதம்,பதப்பொருள்,வாக்கியம்,வினா,விடை

உலோகம் —– பொன்,வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம்

எழுத்தானம் —– பாலன்,குமரன்,அரசன்,விருத்தன்,மரணம்

ஐங்காயம் —– கடுகு,ஓமம்,வெந்தயம்,உள்ளி,பெருங்காயம்

ஐங்காரம் —– சீனக்காரம்,வெங்காரம்,பொரிகாரம்,சௌக்காரம்,நவச்சாரம்

ஐம்புலநுகர்ச்சியில் இறப்பன —– மீன்,வண்டு,யானை,அசுணம்,விட்டில்

கனி —– எலும்பிச்சை,நாரத்தை,மாதுளை,தமரத்தை,குளஞ்சி

கன்னிகை —– அகலிகை,திரௌபதி,சீதை,தாரை,மண்டோதரி

குரவர் —– அரசன்,உபாத்தியாயன்,தந்தை,தேசிகன்,மூத்தோன்

குற்றம் —– கொட்டாவி,நெட்டை,குறுறுப்பு,மூச்சிடல்,அலமால்

கேள்வி —– அறம்,பொருள்,இன்பம்,வீடு,வழிநிற்றல்

கைத்தொழில் —– எண்ணல்,எழுதல்,இலைகிள்ளல்,பூத்தொடுத்திடல்,யாழ்வருடல்

சத்தி —– பராசத்தி,ஆதிசத்தி,இச்சாசத்தி,ஞானசத்தி,கிரியாசத்தி

சுத்தி —– ஆன்மசுத்தி,தானசுத்தி,திரவியசுத்தி,மந்திரசுத்தி,இலிங்கசுத்தி

திராவிடம் —– துளுவம்,மாந்திரம்,கன்னடம்,மகாராட்டிரம்,கூர்ச்சரம்

திருவியம் உண்டாமிடம் —– மலை,காடு,நாடு,நகர்,நகர்,கடல்

திருமால் ஆயுதம் —– சக்கரம்,தனு,வாள்,தண்டு,சங்கம்

துரகதி —– மல்லகதி,மயூரகதி,வியாக்கிரகதி,வானரகதி,இடபகதி

தூபம் —– பச்சைக்கருப்பூரம்,குந்துருக்கம்,காரகில்,சந்தனம்,சீதாரி

தேவர் —– பிரமன்,விட்டுணு,உருத்திரன்,மகேசுரன்,சதாசிவன்

பஞ்சமூல்ம —– செவ்வியம்,சித்திரமூலம்,கண்டுபாரங்கி,பேரரத்தை,சுக்கு

பட்சி —– வல்லூறு,ஆச்தை,காகம்,கோழி,மயில்

புலன் —– சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்

மயிர்ப்பால் —– முடி,கொண்டை,சுருள்,குழல்,பனிச்சை

மன்றம் —– வெள்ளிடை மன்றம்,இலஞ்சி மன்றம்,கன்னின்ற மன்றம்,பூதசதுக்கம்,பாவைமன்றம்

யாகம் —– பிரமம்,தெய்வம்,பூதம்,பிதிர்,மானுடம்

வண்ணம் —– வெண்மை,கர்மை,செம்மை,பசுமை

வாசம் —– இலவங்கம்,ஏலம்,கருப்பூரம்,சாதிக்காய்,தக்கோலம்

விரை —– கோட்டம்,துருக்கம்,தகரம்,அகில்,சந்தனம்

வினா —– அறியான் வினா,அறிவு ஒப்புக்காண்டல்,அறிவுஒப்புக்

காண்டல்,ஐயமறுத்தல்,அறிவுகோண்டல்,மெய்யவற்குக் காட்டல்

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *