தொகைச்சொற்கள்

Aug 11, 2009 | Uncategorized | 0 comments

நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்……..

அச்சம் —- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன்

அரண — மலை,காடு,மதில்,கடல்

அளவு—எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்

அழுகை —- இளிவு,அழவு,அசைவு,வறுமை

அனுபந்தம் —- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம்

ஆச்சிரமம் —– பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம்

ஆடூஉக்குணம் —— அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி

இழிச்சொல் —- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்

இளிவரல் —– மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை,

உண்டி —— உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல்

உபாயம் —– சாமம்,தானம்,பேதம்,தண்டம்

உவகை —– செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு

உரை —– கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை

ஊறுபாடு —— எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல்

கதி —– தேவர்,மக்கள்,விலங்கு,நாகர்

கணக்கு —- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு

கம்பம் —-தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி

கரணம் —–மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம்

கல்வி —- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல்

கவிகள் —– ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம்

காதிகள் —– ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம்

சதுரங்கம் —– தேர்,கரி,பரி,கலாள்

சாந்துவகை —– பீதம்,கலவை,வட்டிகை,புலி

சொல்வகை —– பெயர்,வினை,இடை ,உரி

தோற்கருவி —- மத்தளம்,தண்ணுமை,இடக்கை,சல்லியம்

தோற்றம் —- பை,முட்டை,நிலம்,வியர்வை

நகை —– எளெளல்,இளமை,பேதமை,மடன்

நிலம் —- குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்

நிலை —- பைசாசம்,மண்டலம்,ஆலீடம்,பிரத்தியாலீடம்

பண் —- பாலை,குறிஞ்சி,மருதம்,செவ்வழி

பதவி —- சாலோகம்,சாமீபம்,சாருபம்,சாயுச்சியம்

பா —– வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா

பிச்சை —- சதானிகபிச்சை,தகுகணாபிச்சை,மாதுகரிபிச்சை,யாசகபிச்சை

புருக்ஷசாதி —- பூசிமாரன்,கெத்தமாரன்,புத்திரசேனன்

புலமையோர் —- கவி,கமகன்,வாதி,வாக்கி

பூ —- கொடிப்பூ,கோட்டுப்பூ,நீர்ப்பூ,புதர்ப்பூ

பெருமிதம் —- கல்வி,தறுகண்,இசைமை,கொடை

பெண்கள் பருவம் —– வாலை,தருணி,பிரவிடை,விருத்தை

பெண்வகை —– பதுமினி,சித்தினி,சங்கினி,அத்தினி

பொருள் —- அறம்,பொருள்,இன்பம்,வீடு

பொன்வகை —- ஆடகம்,கிளிச்சிறை,சாதகம்,சாம்பூந்தம்

மகடூஉக்குணம் —– நாணம்,மடம்,அச்சம்,பயிர்ப்பு

மருட்கை —- புதுமை , பெருமை,சிறுமை,ஆக்கம்

மார்க்கம் —- சரிகை,கிரிசை,யோகம்,ஞானம்

யுகம் —- கிரதம்,திரேதம்,துவாபரம்,கவி

வெகுளி —- உறுப்பகை,குடிகோள்,அலை,கொலை

—————–தொடரும்

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *