கடைசித் துளி
உன் துளியாக இருக்கட்டும்
என் தேடலின்
ஆரம்பம் பூக்கிறது
முடிவு உன்னுள் இனிக்கின்றது.
புரியாதவர் கூறுவர்
அடிமை என்று
புரிந்தவர் போற்றுவர்
உயிரடிமை என்று…….
ஆழ்வார் நாயன்மார்
நாயக நாயகியாக
எவ்வாறு குழம்பினேன்
பின்
உன்னை பார்த்தும் தெளிந்தேன்……..
நிலா தண்ணிழல் தரும்
நீ……..
என் நிழலையும்
அல்லவா
சேர்த்து மகிழ்கிறாய்………
ஆணில் பாதி
பெண்ணென்று
உணர்ந்தவன் நீயல்லவா…..
அர்த்தநாரீஸ்வரன்……
நான் அடிமைப் படுத்தினேனாம்
அது – உண்மை
எப்படி சாத்தியமானது
குழம்பினார்கள்……….
அன்பினால்
என்றவுடன்
அதிசயித்தார்கள்………
நீ கேட்டதை நானும்
நான் கேட்டதை நீயும்
கொடுத்தோம்…….
வசமானது வாழ்க்கை………
யார் சொன்னது
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த
வரமென்று……
கணவன் அமைவது
அல்லவா
கடவுள் கொடுத்த வரம்……..
கணவன் எனக்
கைபிடித்தேன்
தோழனெனத்
தோள் கொடுத்தாய்………
0 Comments