இணைத்தின் மூலம் அறிமுகமாகி சிறந்த தோழராய் ,என்னை என்று ஊக்கப்படுத்திக் கொண்டு இருக்கும் நண்பர் முனைவர் குணசீலன் அவர்கள் முதலில் எனக்குப் பட்டாம் பூச்சி விருதுவழங்கி சிறப்பித்தார்கள்.அவருடைய அன்பு அளவிடற்கரிது அவருக்கு என் நன்றியும் பாராட்டுகளும்………
அடுத்து அன்பு தம்பி சந்ரு பற்றிக் கூறவேண்டும் ஒவ்வொரு இடுகையினையும் படித்துவிட்டு உடனே தனது கருத்துரையை இடுவார். அவரும் நட்பு என்னும் நேசக்கரத்தை நீட்டி என்னை நெகிழச் செய்துவிட்டார் அவருக்கும் என்னுடைய நன்றியும் வாழ்த்துக்களும்………
அன்பின் தோழர் சிங்கை ஞானசேகரன் அவர்கள் ,என்னுடைய பதிவுகளையெல்லாம் படித்து உடனுக்குடன் கருத்துரை இடக்கூடிய நன்நெஞ்சர் .என்னை வலைச்சரத்திலும் அறிமுகப்படுத்திய பண்பர். அவரும் எனக்கு நட்பு கரம் நீட்டி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டார் அவருக்கும் என்னுடைய நன்றிகளும் வாழ்த்துக்களும்………
வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய அன்பு தோழி தமிழரசி அவர்களுக்கும் என்னுடை ய இதயம் கனிந்த நன்றிகளும் நேசங்களும்……..
தனி இணையப்பக்கத்தில் எழுதிகொண்டிருந்த என்னைப் ப்ளாக்கரில் எழுத தூண்டி,ஆக்கமும் ஊக்கமும் நாளும் வழங்கி வரும் அன்பின் நண்பர் பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றிகள்…….
இணையம் மூலம் அறிமுகமான நண்பர்களுள் நான் குறிப்பட வேண்டிய நண்பர் தமிழ்நிலவன் ,நல்ல சிந்தனையாளர்,பண்பாளர் ,தமிழ்நாட்டில் பிறந்து இன்று பெங்களூரில் வேலைப்பார்த்துக் கொண்டு இருப்பவர் .இணையம் தொடர்பான் செய்திகளை அவருடன் கலந்து பேசுவேன் .என்னுடைய பக்கத்தை வடிவமைத்துக் கொடுத்த்தில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு .அவருக்கும் என்னுடைய நன்றிகள்…..
இணையத்தின் மூலம் அறிமுகமாகி என்னை மேலும் மேலும் எழுத்தூண்டி,என்னை செம்மைப்படுத்திக்கொண்டு இருக்கும்,அன்பின் உறைவிடம் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா அம்மா அவர்களுக்கும் என் உள்ளார்ந்த நன்றிகள்…….
என்னுடைய பக்கதில் உள்ள இடுகைகளை குட்ப்ளாக்கில் வெளியிட்டு ,என்னை சிறப்பித்த இளமை விகடனுக்கும் என் நன்றிகள்……
என்னை எழுத்தாளராக அறிமுகப்படுத்திய தமிழ் ஆத்தர்ஸூக்கும்,முத்துக்கமல இதழுக்கும் என் நன்றிகள்…….
என் பக்கத்திற்கு வந்து நாளும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னடைய நன்றி….நன்றி ……நன்றி நன்றிக்கு எல்லையில்லை…….
நட்பெனும் சிறையில்
அடைப்பட்டால்….
நாளும்
வளர்பிறைதான்…….
அறிந்தேன்
உங்களால்…….
தொடரட்டும்
நாளும்
நேசக் கரங்கள்……….
அன்புடன்
கல்பனாசேக்கிழார்
0 Comments