படித்ததில் பிடித்தது

Jul 29, 2009 | Uncategorized | 0 comments

அண்மையில் ஒரு ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கத்தைப் படித்தேன் மிகவும் ரசித்தேன்.அக் கவிதையின் ஆசிரியர் ஜேம்ஸ்வெல்டன் ஜான்ஸன்.கவிதையின் தலைப்பு “Sence You Went Away” என்பது .பிரிவின் வலியினைப் பதிவுசெய்துள்ளார்.அக்கவிதையை நீங்களும் படித்துப் பாருங்களேன்.

நீ என்னை விட்டு சென்றதில் இருந்து……..

நீ என்னை விட்டுச் சென்றதிலிருந்து,
தோன்றுகினது எனக்கு,
விண்மீண்கள் அவ்வளவாக மின்னுவதில்லை என,
கதிரவன் ஒளியினை இழந்துவிட்டான் என்,
ஒன்றும் சரியாக நிகழ்வதில்லை என.

நீ என்னை விட்டுச்சென்றதிலிருந்து
தோன்றுகிறது எனக்கு,
வானம் வெளிர் நீலமாய்கூட இல்லை என,
எல்லாம் உன்னை விரும்புகின்றன என,
நான் என்ன செய்யவேண்டும் எனதெ தெரியவில்லை என.

நீ என்னை விட்டுச் சென்றதிலிருந்து,
தோன்றுகிறது எனக்கு,
எல்லாம் தவறு என,
நாட்கள் இரட்டிப்பு நீண்டதாக உள்ளதென,
பறவைக்ள பாட்டினை மறந்து விட்டன என.

நீ என்னை விட்டு சென்றதிலிருந்து,
தோன்றுகிறது எனக்கு,
நான் பெருமூச்சு விடுவதை தவிர்க்க முடியவில்லை என,
என் தொண்டை வறண்டு உள்ளது என,
கண்களில் நீர்த்திவலைகள் நிரம்பி உள்ளன என.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *