காகம் கரைந்தது காதலன் வந்தான்

Jul 21, 2009 | Uncategorized | 0 comments

காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் எழுதிய குறுந்தொகைப் பாடல் ஒன்று, காதலனை விட்டுப் பிரிந்த தலைவிக்குத் தோழி நன்மொழி கூறுவதாக அமைந்துள்ளது.
காதலன் வரைவை எதிபார்த்திருக்கிறாள் தலைவி அவன் வரவில்லை அதனை எண்ணி புலம்பிக்கொண்டு இருக்கிறள் தலைவி.அவளை எப்படி தேற்றுவது என்று எண்ணுகிறாள் தோழி.

அப்பொழுது காகம் ஒன்று கரைகின்றது.அதனைக் கண்ட தோழி இன்று கண்டிப்பாக உன்னுடைய காதலன் வந்துவிடுவான் என்று கூறுகின்றாள்.

எப்படி இவ்வளவு நம்பிக்கை கூறுகிறாய் என்கிறாள் தோழி.

அங்கு காகம் கரைகிறது பார்த்தாயா! காகம் கரைந்தால் யரேனும் வருவர்!அது உன் காதலனாக தான் இருப்பான்.கவலையை ஒழி என்றாள்.

தோழி கூறியவுடன் காதலன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை தலைவிக்கு உண்டாகின்றது.மனம் கலங்காமல் தலைவன் வரவை எதிர் நோக்கியிருந்தாள்.

அவள் எண்ணிய படியே காதலன் வந்தான். காதலிக்கு ஆறுதல் கூறியதற்காக தோழிக்கு நன்றி கூறி பாரட்டினான்.

உடனே தோழி ஆறுதல் தந்து நானா ? அல்ல ! அன்று கரைந்த காகம் அல்லவா?ஆகையால் தலைவியின் துன்பத்தை நீக்கிய அந்த காகத்துக்கு, நள்ளி வள்ளலின் காட்டில் உள்ள பசுக்கள் ஏராளம் உள்ளதல்லவா?.அந்தப் பசுவின் நெய்யும்,தொண்டியில் விளைந்த அரிசியும் கலந்து ஏழு பாத்திரங்களில் ஏந்திக் கொடுத்தாலும் தகும் என்று கூறுகின்றாள்.
இந்த பாடலின் மூலமா அந்த காலத்தில் இருந்தே காகம் கரைந்தால் வீட்டிற்கு யாரேனும் வருவர் என்ற நம்பிக்கை தொடர்ந்து இருந்துள்ளதை அறியலாம்.

அதோ அந்தப் பாடல் படித்து இன்புறுங்கள்.

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின்,தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி
பெருதோள் நெகிழ்த்த நெல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.(குறுந்தொகை,210)

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *