இணைமொழிகள்

Jul 15, 2009 | Uncategorized | 0 comments

ககரத்தில் தொடங்கும் இணைமொழிகள்.

சரக்குக் கங்குகரையற்றுக் கிடக்கிறது.
கஞ்சிதண்ணீர் அவனுக்குச் செல்லவில்லை.
கட்டியும் முட்டியுமாய் இழுதுப்போட்டுருக்கான்.
எதற்கும் ஒரு கட்டு முட்டு வேண்டும்.
கடாவிடைகளால் பொருளை விளக்கினார்.

கண்டது கடியது எல்லாம் சொல்லக் கூடாது.
கண்டவன் கடியவனெல்லாம் வந்து சாப்பிடுகிறான்.
கணக்கு வழக்கு இல்லாமல் எடுத்துச் சென்றான்.
கண்டந்துண்டமாய் வெட்டு.
கண்ணீரும் கம்பலையுமாய் இருக்கிறாள்.

கண்ணும் கருத்துமாய் காக்கவேண்டும்.
கத்திக்கதறி அழுதான்.
கந்தல் கூலமாய் கிடக்கிறது.
கப்புங்கவருமாய்க் கிளைத்திருக்கிறது.
கந்தலும் பொத்தலும் உடுத்திக்கொண்டு திரிகிறான்.

கரடு முரடானவன்.
கரை துறை தெரியவில்லை.
கல்லுங் கரடுமான வழி.
கல்லுங் கரம்புமாய் கிடக்கின்ற நிலம்.
கல்வி கேள்விகளில் சிறந்தவன்.

கல்யாணம் காட்சிக்குப் போகவேண்டும்.
களங்கமளங்க மற்றுப் பேசவேண்டும்.
கள்ளங்கவடில்லாதவன்.
கற்பும் பொற்றபும் உடையவள்.
கற்றோருக்கும் மற்றோருக்கும் விளங்கும் நன்.
கன்றுகாலி வரும் நேரம்.
கனவோ நனவோ?

———–தொடரும்………….

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *