இணைமொழிகள்

Jul 13, 2009 | Uncategorized | 0 comments

நேற்று அகரத்தில் தொடங்கும் சில இணை மொழிகளைப் பார்த்தோம் இன்று ஆகாரத்தில் தொடங்கும் சில இணைமொழிகள்.உங்கள் பக்கத்தில் வழங்கப்பெறும் இதனைப் போன்ற இணைமொழிகள் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே.

ஆக்கமும் கேடும் அனைவருக்கும் உண்டு.
ஆக்கியரித்துப் போடுகிறவள் அம்மா.
ஆட்டமும் பாட்டுமா இருக்கிறது அங்கு.
ஆடல் பாடல் கண்டு மகிழுங்கள்.
காலை ஆட்டி அலைத்து வருகிறாள்.

தூணை ஆட்டி அசைத்துப் பார்த்தேன்.
ஆடிப்பாடிச் செல்லுங்கள்.
ஆடியசைந்து நடக்கின்றான்.
ஆடையணி யலங்காரம் வேண்டும்.
ஆடைக்கும் கோடைக்கும் வற்றாத கிணறு.

ஆண்டான்அடிமை வேறுபாடில்லை.
ஆதாளி பாதாளியாய் இருக்கிறது.
ஆதியந்தம் இல்லாதவன்.
ஆய்ந்தோய்ந்து பார்த்து நட்பு கொள்ள வேண்டும்.
நேற்றிரவு கண்ணனுக்கு ஆயிற்று போயிற்று என்று கிடந்தது.

அவன் ஆயிற்றா போயிற்றா என்று அரட்டினான்.
ஆலே பூலே என்று அலப்பிக்கொண்டு இருக்கிறான்.
ஊர் முழுதும் ஆழும்பாழுமாய்க் கிடக்கிறது.
ஆளும் தேளும் அற்ற இடம்.
அவனை ஆற்றி தேற்றி வை.
ஆற அமர காரியம் செய்ய வேண்டும்.
ஆனைக்கும் பூனைக்கும் உள்ள தூரம்.

நாளை தொடரும்……………

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *