இணைமொழிகள்

Jul 12, 2009 | Uncategorized | 0 comments

எழுத்து நடையில் பல்வேறு வகைகள் உள்ளன.ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடையைப் பின்பற்றுவர்.சிலருடைய எழுத்து நடையைப் பார்த்தவுடன் இவருடைய எழுத்து தான் என்று கண்டுப் பிடித்துவிடுவோம்.சிலருடைய எழுத்தில் காணப்படும் சொல்லாட்ச்சியைக் கொண்டும் இவர் எழுத்து என்று கூறிவிடலாம்.நம் எழுதும் போது சில இணைச் சொற்களைப் பயனபடுத்தலாம் அவ்வாறு பயன்படுத்தும் போது நம் எழுத்து நடை சிறப்பாக அமையும்.அவ்வாறு எழுத்து நடையைச் சிறப்பாக அமைத்துக்கொள்ள சில இணைச் சொற்களைப் பார்க்கலாம்.

அக்கம் பக்கம் பார்த்துப் பேசு
அக்குத் தொக்கு இல்லாதவன்.
அகடவிகடமா பேசுகிறான்
அடங்கிவொடுங்கி யிரு.
அஞ்சிலே பிஞ்சிலே அறியவேண்டும்

அடரடி படரடியாய்க் கிடக்கு.
அவன் இவனுக்கு அடிதண்டம் பிடிதண்டம்
அடுகிடை படிகிடையாய் கிடத்தல்
அடிப்பும் அணைப்புமா இருக்க வேணுடும்.
அடையலும் விடியலும் குருடுக்கில்லை.

அண்டம் பிண்டம் ஒத்த இயல்புடையன.
அண்டை வீடு அடுத்த வீடி பகையிருக்க கூடாது.
அண்டை அயலெல்லாம் தேடி பார்த்தேன்.
அந்தியும் சந்தியும் பூசை நடக்கிறது.
அயர்ந்தது மறந்தது எடுத்துக் கொண்டு போ.

அரதேசி பரதேசிக்கு உணவளிக்க வேண்டும்.
அரிசி தவசி விலையேறி விட்டது.
அருவுருவாகிய இறைவன்.
அருமை பெருமை தெரியவில்லை.
அல்லுஞ் சில்லுமாய்ப் பணம் செலவாகிவிட்டது.

அல்லும் பகலும் வேலை.
அல்லை தொல்லை எல்லாம் தீர வேண்டும்.
அலுங்கி குலுங்கி போயிற்று
அலுத்துப் புலுத்து வந்திருக்கான்.
அலைந்து குலைந்து கெட்டுவிட்டான்.

அழிந்தொழிந்து போயிற்று.
அழுகையும் கண்ணீருமாய் வந்து சேர்ந்தான்.
அழுங்கி புழுங்கி சாகின்றான்.
அழுத்தந் திருத்தமாய்ப் படிக்கின்றான்.
அள்ளாடி தள்ளாடி நடக்கின்றான்.

அழுது தொழுது வாங்கிவிட்டான்.
அற்ற குற்றம் பார்க்க ஆளில்லை.
அறமறம் அறிந்து ஒழுக வேண்டும்.
அறுக்கப் பொறுக்கப் பாடுபட்டும் குடிக்க கஞ்சியில்லை.
அடுத்து மடுத்துக் கேட்க வேண்டும்.
——————
தொடரும்…………..

இது போன்ற இணைமொழிகள் உங்களுக்குத் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *