புலி வழிபாடு

Jun 30, 2009 | Uncategorized | 0 comments

மானுட வாழ்வில் மனிதன் எதனைக் கண்டு அச்சப்படத் தொடங்கினானோ அவற்றையும், தமக்குப் பயன்தரக்கூடியவற்றையும் வழிப்படத் தொடங்கினான்.அவ்வகையில் காலம்தோறும் விலங்குகள் வழிபாட்டில் புலி நடைமுறையில் இருந்துள்ளது.தொடக்க கால நாட்டுப்புற மக்கள் புலி ,சிறுத்தை போன்ற விலங்குகளின் வலிமையும் சீற்றத்தையும் கண்டு அஞ்சியும் வியந்தும் ,அவற்றை தெய்வங்களாக எண்ணி வழிபடத்தொடங்கினர்.வேட்டைக்கால மனிதன் அவ் விலங்குகளில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள அவற்றை வழிபடத் தொடங்கியிருக்கலாம்.இந்திய்ய பழங்குடி மலாயின மக்களாகிய இகான்களும் சாந்தளர்களும் புலியைத் தங்கள் தெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர்.மகாராட்டிரா மாநிலத்தில் வாகோபா எனப்படும் தலைமைப்புலி கிராம மக்களால் வழிப்படப் படுகிறது.புலிவழிபாட்டின் கூறாக இன்றைக்கும் குழந்தைகளின் கழுத்து அல்லது இடுப்பில் தங்கத்தால் ஆன வடத்தில் புலிநகங்களைக் கோர்த்து அணிந்திருப்பதைக் காணலாம். சுமத்திரா போன்ற நாடுகளில் புலிகள் வேட்டையாடப்படுவதில்லை.தன் உயிரைப்பாதுகாத்துக்கொள்ள வேறு வழியில்லை என்னும் போது மட்டுமே அங்கு புலி கொல்லப்படுகின்றது.அந்த அளவிற்கு மக்கள் மனத்தில் புலி இடம் பெற்றுள்ளது.
சிவனின் வாகனமாக் கருதப்படும் புலி கேரள மாநிலத்தில் தெய்யாட்டத்தில் புல்லிக்காரிம் காளி,புலி மாருதம்,மாறப்புலியன்,கண்டாப் புலி,புளியொருகாளி,காளப்புலியன் என வழிபடு தெய்வங்களாக இடம் பெற்றுள்ளன.புலியின் மீதுள்ள விருபத்தினால் தான் தமிழக கிராமப்புறங்களில் புலிவேடம் அணிந்த புலியாட்டம் ஆடப்பெறுகின்றது.இப்பொழுது இவ்வகை ஆட்டம் அருகி வருகின்றது.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *