வயல்களுக்குக் களை அழிவை உண்டாக்குவது போல,மனிதர்களுக்குக் காம இச்சை அழிவை உண்டாக்குகிறது———புத்தர்
கல்லைச் செதுக்கி உருவாக்குவது போல்,மனிதனை உருவாக்க முடியாது.தனக்குத்தானே உருவாகும்படி அவனுக்குக் கற்பிக்கத்தான் முடியும்.———–கே.எம்.முன்ஷி
நேரம் என்பது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே செல்வம்.இந்த செல்வத்தை எப்படிச் செலவு செய்யவேண்டும் என்ற உரிமை உங்கள் ஒருவருக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவர்கள் ஏமாற்றித் தங்களுடைய தன்நலத்திற்காக உபயோகித்துக்கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீர்கள்.
படிக்க நேரம் ஒதுக்குங்கள்–அது அறிவின் ஊற்று.
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்–அது மகிழ்ச்சிக்கு வழி.
உழைக்க நேரம் ஒதுக்குங்கள்–அது வெற்றியின் விலை.
பேச்சு என்ற வணிகத்தில் தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையுமே பயன்படுத்துங்கள்.———-அண்ணல் காந்தியடிகள்.
0 Comments